Citadel Honey Bunny: சமந்தாவின் தாறுமாறான ஆக்ஷன்.. வெளியானது சிட்டாடல் டீஸர்.. ரிலீஸ் தேதி இதோ!
மும்பை: அமேசான் பிரைம் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ள சமந்தாவின் சிட்டாடல் ஹனி பனி வெப்சீரிஸ் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடித்த அந்த சீரிஸின் 2வது சீசனில் வில்லியாக சமந்தா நடித்து மிரட்டியிருந்தார். நெகட்டிவ் கதாபாத்திரமாக இருந்தாலும், சமந்தாவும் ஒரு ஹீரோவாக சித்தரிக்கப்பட்ட விதம் ஈழப் பெண்ணாக அவர் நடித்தது என அனைத்துமே பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் சமந்தாவுக்கு ஏகப்பட்ட வரவேற்பை பெற்றுத் தந்தது.

அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ருசோ பிரதர்ஸ் தயாரிப்பில் இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், சமந்தாவுடன் இணைந்து பாலிவுட் நடிகர் வருண் தவான் லீடு ரோலில் நடித்துள்ளார்.
ஓடிடி ராணி சமந்தா: சினிமாவில் சமீப காலமாக சமந்தா நடிக்கும் படங்கள் ஹிட் அடிக்காமல் இருந்தாலும், ஓடிடி பக்கம் அவர் தான் ராணியாகவே திகழ்கிறார். ஃபேமிலி மேன் சீசன் 2வுக்கு பிறகு சமந்தா நடித்துள்ள சிட்டாடல் ஹனி பனி சீரிஸ் எப்போது வெளியாகும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது செம சூப்பரான அப்டேட் டீஸருடன் கிடைத்துள்ளது.

சிட்டாடல் டீஸர் ரிலீஸ்: ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கியுள்ள சிட்டாடல் வெப்சீரிஸ் எப்போது வெளியாகப் போகிறது என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், அதன் அதிரடியான டீசர் தற்போது வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா கோட்டுக்குள் ஸ்வெட்டர், சட்டை என அணிந்துக் கொண்டு பிரியங்கா சோப்ரா மாதிரி ஆக்ஷன் ஹீரோயினாக மாறியுள்ளார்.
ரிலீஸ் தேதி: சிட்டாடல் ஹனி பனி டீசர் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாவதை தான் சமீபத்தில் நடிகை சமந்தா சாப்பிடும் உணவுப் பொருளில் ஒரு துண்டுச் சீட்டை காட்டி சொல்லியிருந்தார். தற்போது வெளியாகி உள்ள டீசரில் இந்த வெப்சீரிஸ் நவம்பர் மாதம் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா சோப்ரா சீரிஸ்: ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்த சிட்டாடல் வெப்சீரிஸ் வெளியாகி ரசிகர்களுக்கு கவர்ச்சித் தீனி கொடுத்திருந்தது. அதே அளவுக்கான போல்டான காட்சிகளில் சமந்தா வருண் தவான் உடன் நடித்திருப்பாரா? என்பது வெப்சீரிஸை பார்த்தால் தான் தெரியவரும். டீசரில் ஒரேயொரு லிப் லாக் சீன் மட்டும் வாம்மா மின்னல் ரேஞ்சுக்கு வந்து சென்றது. வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்த பேபி ஜான் திரைப்படமும் நவம்பர் மாதம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











