முதலில் ஒன் நைட் ஸ்டாண்ட்.. அப்புறம் கல்யாணம்.. பிரபல நடிகரின் மனைவியின் பகீர் வாக்குமூலம்!
மும்பை: ராஜா, மொகாபத், அவுசார், சர்ஃப் டர்ன் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் கபூரின் மனைவி ஓடிடியில் வெளியாகியுள்ள 'Fabulous Lives Vs Bollywood Wives' எனும் வெப்ஷோவில் வெளிப்படையாக தனது திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்து பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல மாடல் நடிகையாக இருந்த மஹீப் கபூர் கடந்த 1997ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சஞ்சய் கபூரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு ஷனாயா கபூர் மற்றும் ஜஹான் கபூர் என ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஷனாயா கபூர் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள பிரபலங்களின் மனைவிகளுடனான கலந்துரையாடல் வெப் ஷோவில் பங்கேற்று பேசிய மஹீப் கபூர் நடிகர் சஞ்சய் கபூரை திருமணம் செய்துக் கொள்வதற்கு முன்னதாக அவருடன் ஒன் நைட் ஸ்டாண்ட் செய்ததாக பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் கபூர்: 1995ம் ஆண்டு வெளியான பிரேம் படத்தில் நடித்து இந்தியில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் சஞ்சய் கபூர். ஆரம்பத்தில் ஹீரோவாக கலக்கி வந்த அவர் தற்போது வெப்சீரிஸ்களிலும் பாலிவுட் படங்களிலும் அப்பா கதாபாத்திரத்திலும் துணை நடிகராகவும் நடித்து வருகிறார். லஸ்ட் ஸ்டோரீஸ், மிஷன் மங்கள், ஜோயா ஃபேக்டர், ஸ்லீப்பிங் பார்ட்னர், விஜய் சேதுபதி நடித்த மெரி கிஸ்துமஸ் மற்றும் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான மர்டர் முபாரக் என ஏகப்பட்ட படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

பாலிவுட் நடிகர்களின் மனைவிகள்: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான 'Fabulous Lives Vs Bollywood Wives' நிகழ்ச்சியில் சில முன்னணி நடிகர்களின் மனைவிமார்கள் தங்களின் தனிப்பட்ட திருமண வாழ்க்கை குறித்தும் பாலிவுட் பிரபலத்துக்கு மனைவியாக இருப்பதால் தாங்கள் பெற்றது என்ன? இழந்தது என்ன? என அனைத்து அந்தரங்க ரகசியங்களையும் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
திருமணத்துக்கு முன்பே ஒன் நைட் ஸ்டாண்ட்: இந்நிலையில், சஞ்சய் கபூரின் மனைவி மற்றும் முன்னாள் மாடல் அழகியான மஹீப் கபூர், முதல் முதலில் பார்ட்டி ஒன்றில் தான் சஞ்சய் கபூரை பார்த்தேன். அந்த பார்ட்டிக்கே யாருக்கும் தெரியாமல் தான் சென்றிருந்தேன். தலைக்கு ஏறிய போதையில் இருந்தபோது தான் நடிகர் சஞ்சய் கபூரை பார்த்தேன். ஆனால், அப்போது எனக்குத் தெரியாது இவரையே திருமணம் செய்துக் கொள்வேன் என பாலிவுட் நடிகருடன் ஒன் நைட் ஸ்டாண்ட் வைத்துக் கொண்டது குறித்து வெளிப்படையாக 25 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு மஹீப் கபூர் பேசியுள்ளார்.
இதெல்லாம் ஒரு பெருமையா?: பாலிவுட் நடிகரின் மனைவி திருமணத்துக்கு முன்பே அந்த நடிகருடன் ஒன் நைட் ஸ்டாண்ட் இருந்தது குறித்து பேசுவது எல்லாம் என்ன பெருமையா? என ரசிகர்கள் விளாசி வருகின்றனர். சஞ்சய் கபூருக்கு முன்பாக யாருடன் எல்லாம் நீங்க ஒன் நைட் ஸ்டாண்ட் இருந்தீங்க அந்த லிஸ்ட் சொல்லுங்க என்றும் நெட்டிசன்கள் மஹீப் கபூருக்கு எதிரான கமெண்ட்டுகளை சோஷியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











