சந்தானம் நடித்த இங்க நான் தான் கிங்கு ஓடிடியில் வெளியானது.. எந்த தளம் தெரியுமா?

சென்னை: அடிதடி, வெட்டு, குத்து என ரத்தக்களறியாக பார்த்த ரசிகர்களுக்கு அவ்வப்போது ஆறுதல் அளிக்கும் வகையில் சந்தானத்தின் நகைச்சுவை திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவலை மறக்க செய்யும். அந்த வகையில் சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் தியேட்டரில் வெளியான இங்கு நான் தான் கிங்கு திரைப்படம் ஓடிடியில் இன்று வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குனர்களுக்கு நடிகர் சந்தானம் வாய்ப்பு கொடுத்து வருகிறார். அதில், ஒரு சில படங்கள் மட்டுமே அவருக்கு கிளிக் ஆகிறது. பல படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ஓரளவுக்கு சுமாராக இருந்தாலும் வசூல் ரீதியாக போட்ட பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்பட்டது.

Santhanam OTT

நடிகர் சந்தானம்: கடந்த ஆண்டு சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெற்றி படமாக மாறியது. ஆனால் அதன் பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான கிக் மற்றும் 80ஸ் பில்டப் படங்கள் சரியாக ஓடவில்லை. அதே நிலைமையில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் இங்க நான்தான் கிங்கு. இந்த படத்தை ஆனந்த் நாராயணன் இயக்க, தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா, முனிஷ் காந்த், லொள்ளுசபா மாறன், மனோபாலா, சேஷூ, கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இங்கு நான் தான் கிங்கு: இப்படத்தில் சந்தானம் கல்யாணம் ஆகாத 90 ஸ் கிட்டாக வருகிறார். அவருக்கு பல இடத்தில் வரன் தேடியும் பெண் கிடைக்கவில்லை. பெண் வீட்டில் மாப்பிள்ளைக்கு சொந்தவீடு, நல்ல வேலை இருக்க வேண்டும் கன்டிஷனால் வயதாகியும் திருமணம் நடக்காமல் போகிறது. இதனால், திருமணத்திற்காக ரூ.25 லட்சத்துக்கு கடன் வாங்கி வீடு கட்டுகிறார். இந்த வீட்டை காட்டி பெரிய இடத்து பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டம்போடுகிறார். அந்த நேரத்தில் ஜமீன் குடும்பத்தில் வரன் அமைய, ஜமீன் வீட்டுக்கு ஆசைபட்டு திருமணம் செய்கிறார். கடைசியில் ஜமீன் வீடும் கடனில் இருப்பதை தெரியவர சந்தானம் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்.

படத்தின் கதை: இதையடுத்து அலுவலகத்தில் சந்தானத்திற்கு பிரச்சனை வர சந்தானம் MDயை அடிக்க போகிறார். இதையடுத்து, மாமனார் தம்பிராமையா, MDயை வீட்டுக்கு அழைத்துவந்து, சந்தானத்துடன் சமாதானம் செய்ய பேசிக்கொண்டு இருக்கும் போது, வீட்டில் கரண்ட் ஷாக் அடித்து அங்கேயே இறக்கிறார் MD. பிறகு அனைவரும் சேர்ந்து, யாருக்கும் தெரியாமல் MD உடலை அப்புறப்படுத்திவிட்டு வீட்டிற்கு வந்தால், அதே MD வீட்டில் உயிரோடு உட்கார்ந்திருக்க, அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

ஓடிடியில் ரிலீஸ்: படத்திற்கு பிளஸ்ஸாக சந்தானம் இருந்தாலும் படம் தியேட்டரில் எதிர்பார்த்தபடி படம் ஓடவில்லை. மேலும், சென்டிமென்ட் காட்சிகள் கதையுடன் ஒட்டாமலும், சந்தானத்துக்கு பொருந்தாமலும், துரத்திக் கொண்டிருக்கிறது. இதையடுத்து, இங்க நான் தான் கிங்கு படம் முதல் நாளில் வெறும் 1 கோடி ரூபாய் வசூலை மட்டுமே வசூலை பெற்று ஒரு வாரத்திலேயே படம் மூட்டைக்கட்டப்பட்டது. இதையடுத்து, இங்கு நான் தான் கிங்கு திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை தியேட்டரில் தவறவிட்ட ரசிகர்கள் இந்த படத்தை ஓடிடியில் பார்த்து மகிழ்ச்சி அடையலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X