லியோவை கொன்னது யாரு?.. காமெடியா, கலர்ஃபுல்லா ஒரு கிரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் பார்க்கணுமா?

சென்னை: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சாரா அலி கான், விஜய் வர்மா, பங்கஜ் திரிபாதி, கரிஷ்மா கபூர், டிம்பிள் கபாடியா என ஏகப்பட்ட பாலிவுட் நடிகர்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் பக்காவான காமெடி மற்றும் கலர்ஃபுல்லான கிரைம் த்ரில்லர் தான் மர்டர் முபாரக்.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாகி உள்ள இந்த 2.30 மணி நேரம் படம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. படத்தின் முதல் சீனில் தொடங்கி கடைசி நேரம் வரை கொலையாளி யார்? என்கிற கேள்வியை எல்லோர் மனதிலும் எழுப்பி கடைசியாக ரிவீல் செய்யும் கிரைம் த்ரில்லர் கதை பாணியில் பக்காவாக வெளியாகி இருக்கும் படம் தான் இந்த மர்டர் முபாரக். ஓடிடியில் வெளியாகி இருக்கும் அந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

Sara Ali Khan s Murder Mubarak Review in Tamil

மர்டர் முபாரக் கதை: ராயல் டெல்லி கிளப் எனும் பாரம்பரியமான டெல்லி கிளப்பில் லியோ என்பவர் கொலை செய்யப்படுகிறார். அவரது கொலையை கொலை அல்ல அது வெறும் விபத்து என்பது போல செட் செய்து வைத்து போலீஸை அழைக்கின்றனர். ஏசிபியாக வரும் பங்கஜ் திரிபாதி ரொம்பவே காமாகவும் அதே சமயம் காமெடியாகவும் அங்கே நடந்தது விபத்து அல்ல கொலை தான் என்பதை கண்டறியும் கலக்கலான படம் தான் மர்டர் முபாரக்.

ராயல் டெல்லி கிளப்: சினிமா நடிகையாக கரிஷ்மா கபூர் இந்த படத்தில் நடித்துள்ளார். தமன்னாவின் கணவர் விஜய் வர்மா வழக்கறிஞராகவும் பாம்பி எனும் கதாபாத்திரத்தில் ஹீரோயினாக சாரா அலி கானும் நடித்துள்ளார். சிலை செய்யும் நபராக டிம்பிள் கபாடியா நடித்துள்ளார். மேலும், பல பிரபலங்கள் ராயல் டெல்லி கிளப்பின் பணக்கார மெம்பர்களாக நடித்துள்ளனர். பங்கஜ் திரிபாதி ரொம்பவே சாதுவாக துப்பறியும் சாம்புவாக இந்த கொலை வழக்கை டீல் செய்யும் விதமே ரசிகர்களை கவர்ந்து விடும்.

Sara Ali Khan s Murder Mubarak Review in Tamil

லியோவை கொன்னது யாரு?: விஜய் நடித்த லியோ படத்தில் யாரு லியோ என்கிற கேள்வியுடன் படம் ஓடியது. இந்நிலையில், லியோவை கொன்னது யாரு என்கிற கேள்வியுடன் மர்டர் முபாரக் படம் ஓடுகிறது. வேலையாள் தொடங்கி, ராஜா குடும்பத்தை சேர்ந்த ராஜா சாப் வரை திருடன் போலீஸ் விளையாட்டில் யாருக்கு திருடன் சீட்டு வந்திருக்கிறது என்பதை போலீஸ் எப்படி கண்டுபிடிப்பாரா? மற்ற எல்லோரும் திருடன் மாதிரி பார்ப்பார்களோ அந்த அளவுக்கு சுவாரஸ்யமாக எல்லோருக்கும் உள் இருக்கும் விவகாரங்கள், இறந்து போன லியோ அவர்களின் வீக்னெஸ் தெரிந்து பிளாக் மெயில் செய்தது என பல விஷயங்கள் புதிர்களாக வெளியாகி ரசிகர்களை ரசிக்க வைத்து விடுகின்றன.

காதலுக்கான கொலை: காதலுக்காக நடந்த கொலை என்பதை கிளைமேக்ஸில் ரிவீல் செய்கின்றனர். அந்த கொலையாளி யார் என்பதற்கும் கொலை செய்ததை கண்டுபிடிக்க கிடைக்கும் ஆதாரங்கள் என ரிவீல் செய்யப்படும் ஒவ்வொரு விஷயமும் புதுசாகவும் புத்திசாலித்தனமாகவும் ஸ்க்ரிப்ட்டில் எழுதப்பட்டதுடன் அதை திரையில் கடத்தியிருக்கும் விதம் தான் இந்த ஓடிடி படம் ரசிகர்களை கவர காரணம் என்கின்றனர். நேரடியாக தியேட்டரிலேயே வெளியிட்டு இருந்தால் பாலிவுட்டில் இந்த ஆண்டு இன்னொரு ஹிட் படம் கிடைத்திருக்குமே என ரசிகர்கள் பேசிக் கொள்கின்றனர். லியோவை கொன்றது யார் என்பதை தெரிந்துக் கொள்ள மிஸ் செய்யாமல் இந்த படத்தை நெட்பிளிக்ஸில் பார்க்கலாம். சில அடல்ட் காட்சிகள் மட்டுமே உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X