அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீஸ் ஆகும சசிக்குமாரின் படங்கள்.. எந்தெந்த படங்கள்னு பாருங்க!

சென்னை: சசிக்குமாரின் இரண்டு படங்கள் அடுத்தடுத்த ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகின்றன.

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சசிகுமார்.

சேது படத்தில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சசிகுமார் அந்த படத்தில் சிறு கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார்.

சசிக்குமார் படங்கள்

சசிக்குமார் படங்கள்

தொடர்ந்து சுப்பிரமணியபுரம், நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப் புலி, பிரம்மன், வெற்றிவேல், அப்பா, கிடாரி, கொடி வீரன், அசுரவதம், பேட்ட, கென்னடி கிளப், நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்

தற்போது ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹேமந்த் என்ற புது முக இயக்குநருக்கும் வாய்ப்பளித்தார் நடிகர் சசிக்குமார். இந்நிலையில் நடிகர் சசிகுமாரின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து ஓடிடி தளத்தில் வெளியாகின்றன.

பொன்ராம் இயக்கத்தில்

பொன்ராம் இயக்கத்தில்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் படத்தில் நடித்து வருகிறார் சசிக்குமார். இந்தப் படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார்.

முக்கிய கதாப்பாத்திரங்கள்

முக்கிய கதாப்பாத்திரங்கள்

மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வினோத் ரத்தினசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்கு, அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார்.

ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்

ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, 'எம்.ஜி.ஆர் மகன்' படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

ஜோதிகாவின் உடன்பிறப்பே படம்

ஜோதிகாவின் உடன்பிறப்பே படம்

ஏற்கனே ஜோதிகா, சமுத்திரக்கனி ஆகியோருடன் சசிக்குமார் நடித்துள்ள உடன் பிறப்பே படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தில் ஜோதிகாவுக்கு சகோதரராக நடித்துள்ளார் சசிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X