Tourist Family OTT: ஓடிடியில் வெளியாக உள்ள டூரிஸ்ட் ஃபேமிலி.. எப்போ.. எந்த தளத்தில் தெரியுமா?

சென்னை: நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்ட டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை பலரும் பாராட்டிய நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த சசிகுமார், சிம்ரன் தம்பதிகள் தனது இரண்டு மகன்களுடன் படகில்தப்பித்து ராமேஸ்வரம் வருகிறார். அங்கிருந்து சென்னை வரும் அவர்கள், சிம்ரனின் அண்ணன் யோகிபாபு மூலம் புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இலங்கையில் பட்ட கஷ்டத்தை மறந்து புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக, சிசிகுமார் போராடி வேலை தேடுகிறார். அவருக்கு அவர் தஞ்சம் அடைந்த பகுதியிலே கார் டிரைவர் வேலை கிடைக்கிறது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சந்தோஷமாக பழகி வந்த போது தான். ராமேஸ்வரத்தில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடக்கிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி: இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தப்பிவந்த குடும்பம் தான் காரணம் என போலீஸ் சந்தேகப்பட்டு சசிக்குமார் குடும்பத்தை தேடுகின்றனர். கடைசியில் சகிக்குமார் குடும்பம் போலீசில் சிக்கியதா... இல்லையா என்பது தான் படத்தின் கதை. இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு தப்பித்து வரும் ஒரு குடும்பத்தின் நிலையை, இயல்பாக, அழகாகப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். அதே போல, 'இந்தத் தமிழ் பேசுவதுதான் பிரச்சினையா.. இல்லை நாங்க தமிழ் பேசுவதே பிரச்சினையா?'என்ற ஒரு வசனத்தைவைத்து கைத்தட்டலை பெற்றுவிட்டார் இயக்குநர். காதல், சண்டை, நகைச்சுவை, மனிதே நேயம் என படம் ழுழுக்க ரசிக்கும்படி இருந்தது. பல நாட்களுக்கு பிறகு, நிறைவான படத்தை பார்த்ததாக படம் பார்த்தவர்கள் கருத்து கூறினர்.

tourist family OTT

ஓடிடி ரிலிஸ் தேதி: தியேட்டரில் வசூலை அள்ளிய இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இப்படம் ஜூன் 2ந் தேதி ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சசிக்குமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல், பகவதி, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி, ராம்குமார் பிரசன்னா ஆகியோர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்து இருந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி இருந்தனர்.

பாராட்டிய ரஜினி: நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதை சசிகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், "படம் சூப்பர் என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னதும், சந்தோசத்துக்கு சொல்லவா வேண்டும். 'அயோத்தி', 'நந்தன்' படம் பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை பார்த்து, சூப்பர் சசிகுமார் என அழுத்திச் சொன்னார். மேலும், தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க. சொல்ல வார்த்தையே இல்ல. அந்த அளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க. சமீபகாலமா உங்களோட கதைத் தேர்வு வியக்க வைக்குது சசிகுமார் என சொன்னதாக சசிக்குமார் அதில் பதிவிட்டு இருந்தார். டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி இன்றோடு 28 நாட்கள் ஆகி உள்ள நிலைகள் இத்திரைப்படம் இதுவரை 57. 79 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் Sacnilk தளம் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Read more about: tourist family ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X