‘சட்டமும் நீதியும்‘ அட்டகாசமான வெப் தொடர்.. உங்கள் ZEE5 தமிழில்.. ஜூலை 18ந் தேதி ரிலீஸ்!

சென்னை: இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், விலங்கு, அயலி, கூசே முனுசாமி வீரப்பன், ஐந்தாம் வேதம் போன்ற பல வெப் தொடர்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. அந்த வகையில் தற்போது, அடுத்த அதிரடி கோர்ட் டிராமா சீரிஸான 'சட்டமும் நீதியும்' என்ற வெப் தொடர் வரும் ஜூலை 18ந் தேதி வெளியிட உள்ளது.

'சட்டமும் நீதியும்' வெப் தொடரின் செய்தியாளர்கள் சந்திப்பு, நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். திரையுலகில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் நடிகர் சரவணன், தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் அவரது சாதனை இந்த விழாவில் கொண்டாடப்பட்டது. முன்னாள் ஹீரோவாகவும், பின்னர் பல வலிமையான கேரக்டர் ரோல்களால் ரசிகர்களின் மனங்களில் தனி இடம் பிடித்தவர் சரவணன், தற்போது தீவிரமும், உணர்வுகளும் கலந்த நுணுக்கமான நடிப்புடன் மீண்டும் நாயகனாகத் திரும்புகிறார். நடிகர் சரவணனுடன் உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா MV நடித்திருக்கிறார்.

Saravanan Zee 5 OTT Sattamum Neethiyum Zee 5 OTT
Photo Credit:

சட்டமும் நீதியும்: அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். "18 கிரியேட்டர்ஸ்" என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இதில், பேசிய ZEE5 தென்னிந்திய உள்ளடக்கத் தலைவர் கவுஷிக் நரசிம்மன், "ZEE5 எப்போதும் சமூக உண்மைகளைப் பிரதிபலிக்கும் துணிச்சலான கதைகளைத் தேர்வு செய்து வருகிறது. 'சட்டமும் நீதியும்' என்ற இந்த சீரிஸில், நீதியும், மனச்சாட்சியும், துணிச்சலும் எவ்வாறு ஒன்று சேரும் என்பதை, உணர்வுப்பூர்வமாக, நம் வாழ்க்கையோடு இணைந்து காணலாம்."

கதையை கேட்டதும் பிடித்துவிட்டது: சட்டமும் நீதியும் சீரிஸ் "குரலற்றவர்களின் குரல்" எனும் கருத்திலிருந்து உருவானது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது. இந்த சீரிஸ், மனதை உலுக்கும் நீதிமன்ற காட்சிகள், உணர்வுகள் சூழ்ந்த கதாபாத்திரங்கள், மற்றும் சமூக ரீதியாக முக்கியமான ஒரு மெசேஜ் ஆகியவற்றுடன், இந்த ஆண்டின் மிக முக்கியமான தமிழ் ஓரிஜினல் படைப்பாக இது இருக்கும் என்றார்.

இதில் பேசிய நடிகர் சரவணன், இந்த படத்தின் கதையை 6 மாதத்திற்கு முன்பே என்னிடம் சொன்னார்கள். நானும் சரி என்று சொன்னேன். அதன் பின் மொத்த கதையும் சொன்னார்கள் கதையை கேட்டதும் எனக்கு பிடித்துவிட்டது ஒகே சொல்லிவிட்டேன். படத்தின் கதை ரொம்ப ரிஸ்க்கான கதை, அதை அப்படியே கதையாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இப்படி ஒரு கதையை எனக்கு கொடுத்த இயக்குநருக்கு ரொம்ப நன்றி. ஜீ5க்கும் ரொம்ப நன்றி இந்த தொடர் ஜூலை18ந் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது அனைவரும் கட்டாயம் பாருங்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X