வழிப்பறி கொள்ளைக்காரங்க ஆட்டத்தை பார்க்க ரெடியா ... ஓடிடில தான் பார்க்கணும்!

சென்னை : இயக்குனர் செல்வராகவன், நடிகை கீர்த்தி சுரேஷ் காம்பினேஷனில் உருவாகியுள்ள படம் சாணி காயிதம்.

Recommended Video

Dhanush & Aishwarya Separation | Aishwarya போட்ட Tweet - இந்த பிரிவு தேவை | Filmibeat Tamil

இந்த படத்தை ராக்கி புகழ் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரலில் நேரடி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன் புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி ரசிகர்களுக்கு சிறப்பான திரை அனுபவத்தை கொடுத்தவர். அவர் சமீபகாலங்களில் நடிப்பிலும் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். அவர் தற்போது பீஸ்ட் படத்தில் விஜய்க்கு வில்லன் ஆகியுள்ளார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணி காயிதம் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

நானே வருவேன் படம்

நானே வருவேன் படம்

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் செல்வராகவன் தனது சகோதரர் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். முன்னதாக தனுஷுடன் இணைந்து புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட வெற்றிப்படங்களை இவர் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ரிலீசுக்கு தயாரான சாணி காயிதம்

ரிலீசுக்கு தயாரான சாணி காயிதம்

இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இவர் நடித்து முடித்துள்ள சாணி காயிதம் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்தப் படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து படத்தில் வழிப்பறிக் கொள்ளையர்களாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறப்பான ராக்கி படம்

சிறப்பான ராக்கி படம்

அருண் மகேஸ்வரனின் ராக்கி படம் சமீபத்தில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. ராக்கி படம் திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்றது ஆனால் தற்போது சாணி காயிதம் படம் ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளது.

ஏப்ரலில் ஓடிடி ரிலீஸ்

ஏப்ரலில் ஓடிடி ரிலீஸ்

வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த படம் அமேசான் பிரைமில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

சிறப்பான கதை தேர்வு

சிறப்பான கதை தேர்வு

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தனது திறமைக்கு சவால் விடும் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சாணி காயிதம் படம் அவருக்கு சிறப்பான ஏற்றத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் போஸ்டர்கள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை முன்னதாக ஏற்படுத்தியுள்ளது. மேலும் அருண் மாதேஸ்வரனின் ராக்கி படமும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

ஏப்ரலில் ரிலீஸ்

ஏப்ரலில் ரிலீஸ்

ஏப்ரல் மாதத்தில் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் உள்ளிட்டவற்றை அடுத்தடுத்து எதிர்பார்க்கலாம். ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள படத்தின் போஸ்டர்கள் வித்தியாசமான வகையில் உள்ளது. இந்தப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X