செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்‘ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன், குஷி ரவி, மைம் கோபி, கௌசல்யா, ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திரத்தில் நடித்த படம் மனிதன் தெய்வமாகலாம். வியம் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் விஜயா சதீஷ் தயாரித்திருக்கும் இப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

"மனிதன் தெய்வமாகலாம்" திரைப்படம், ஒரு சாதாரண மனிதன் சூழ்நிலையால் எப்படி 'தெய்வம்' போல மாறுகிறான் என்பதை சொல்லும் கதையாக அமைந்துள்ளது. இந்த படத்தில், செல்வராகவன் அழகு இல்லாமல் பார்ப்பதற்கே முரட்டுத்தனமாக இருக்கிறார். இவரை குஷி ரவி காதலித்து திருமணம் செய்கிறார். கூலி தொழிலாளியாக இருக்கும் இவர்கள் இருவரும் கடுமையாக உழைத்து, அதில் கிடைத்த பணத்தை வைத்து தாபா ஹோட்டல் ஒன்றை தொடங்குகின்றனர்.

மனிதன் தெய்வமாகலாம்: இதே ஊரில், ஒரு வயதான நபர் ஊருக்கு சரியான சாலை வசதி இல்லாததால், அவர் அரசியல்வாதி ஒய்.ஜி. மகேந்திரனை சந்தித்து மனு கொடுக்கிறார். ஒய்.ஜி. மகேந்திரன் தனது மைத்துனரான மைம் கோபியிடம் சாலை போடும்படி கூறுகிறார். ஆனால், மைம் கோபி பெண்கள் பின்னால் சுற்றி திரியும் ஒரு கொடூர வில்லனாக இருக்கிறார். ஒருநாள் மைம் கோபி, செல்வராகவன் ஹோட்டலுக்கு வந்து சரக்கு அடிக்கிறார். இந்த இடத்தில் குடிக்க கூடாது என செல்வராகவன் சொல்ல, இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இதனால் கோபமடைந்த மைம் கோபி, தனது அடியாட்களை வைத்து தாபாவை அடித்து நொறுக்குகிறார்.

Selvaragavan Manithan Deivamagalam OTT
Photo Credit:

ஓடிடி ரிலீஸ் தேதி: சாதுவாக இருந்த செல்வராகவன் அந்த அநியாயத்துக்கு எப்படி பதிலடி கொடுக்கிறார்? அவரது கோபம் எப்படி 'தெய்வத்தின் தண்டனை' போல மாறுகிறது? என்பதுதான் மீதிக் கதை. செல்வராகவன், தனது கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நன்றாக நடித்து திருப்பதாக படம் பார்த்த அனைவரும் பாராட்டினார்கள். இப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் மே 1ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. படத்தை தியேட்டரில் தவறவிட்டவர்கள் இந்த படத்தி உழைப்பாளர் தினத்தில் ஜாலியாக வீட்டில் இருந்து பார்த்து ரசிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X