செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் சாணிக்காயிதம் ஓடிடியில் ரிலீஸ் ?

சென்னை : இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட இருக்க இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

ராக்கி படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கிவரும் சாணிக்காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இயக்குனர் செல்வராகவன் நடிகராக இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

செல்வராகவன் நடிகராக சாணிக்காயிதம் மூலம் அறிமுகமாக இருப்பதால் ஏற்கனவே இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில் இப்பொழுது இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

ராக்கி

ராக்கி

தமிழ் சினிமாவிற்கு ராக்கி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். தரமணி படத்தில் ஹீரோவாக நடித்திருந்த வசந்த் இப்படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பயங்கரமான த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ராக்கி சென்ற ஆண்டே வெளியாக இருக்க கொரோனா பரவலால் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டது. டீசர் மட்டும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. காட்சிக்கு காட்சி ரத்தம்,சண்டை, த்ரில்லர் என மிரட்டியுள்ளார் இப்படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக கூறப்படுகிறது. நெற்றிக்கண் படத்தை ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்த விக்னேஷ் சிவன், நயன்தாரா இந்த படத்தை வெளியிடுகின்றனர். முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே இரண்டாவது படத்தையும் தொடங்கியுள்ள அருண் மாதேஸ்வரன் அப்படத்திற்கு சாணிக்காயிதம் என டைட்டில் வைத்துள்ளார்.

தேசிய விருது

தேசிய விருது

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போதெல்லாம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை அதிகமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதற்கு காரணம் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட மகாநடி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது தான். நடிகை சாவித்திரியை அப்படியே உரித்து வைத்தது போல அச்சு அசல் அப்படியே நடித்திருந்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுத்து அங்கீகரிக்கப்பட்டது. மகாநடியை தொடர்ந்து பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளாக வெளியாகி ஹிட்டடித்தன. இப்பொழுது குட்லக் சகி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து தந்தையின் சொந்த தயாரிப்பில் வாஷி என்ற படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 பிரம்மாண்ட பட்ஜெட்டில்

பிரம்மாண்ட பட்ஜெட்டில்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருவதும் கதைகளை அதிகமாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வரும் வாய்ப்புகளை தவற விடாமல் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் மரக்கார் படத்தில் நடித்து வருகிறார் . வரலாற்றுப் படமாக உருவாகி வரும் இந்த இப்படத்தில் எக்கச்சக்கமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். தமிழில் இப்போதைக்கு அண்ணாத்த படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து இப்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்றபோது ரஜினிகாந்துக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் காட்சி எடுக்கப்பட்ட போது தான் படக்குழுவில் வேலை செய்த இருவருக்கு கொடுனா இருப்பது தெரியவந்து படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஒருவழியாக தீவிர சிகிச்சைக்குப்பின் ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் நடிக்கும் காட்சிகள் மீண்டும் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நயன்தாரா மற்றும் ஒரு கதாநாயகியாக நடிக்க 90களின் கனவுக் கன்னிகள் குஷ்பு மற்றும் மீனா இதில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

நடிகராக அறிமுகம்

நடிகராக அறிமுகம்

எப்போதும் வித்தியாசமான கதைகளில் நடித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது ராக்கி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்திற்கு சாணிக்காயிதம் படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்க்ரீன் சீன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகிறார். 23 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தனித்துவமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் செல்வராகவன் முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர். இப்பொழுது சாணிக்காயிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் வழிப்பறி செய்யும் திருடர்களாக நடித்துள்ளார்களாம். வித்தியாசமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

நேரடியாக ஓடிடியில்

நேரடியாக ஓடிடியில்

சில தினங்களுக்கு முன்பு சாணிக்காயிதம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது. படப்பிடிப்பை முடித்த சூட்டோடு சூட்டாக முதல் ஆளாக இயக்குனர் செல்வராகவன் தனக்கான பகுதிக்கு டப்பிங் செய்து வருகிறார். இதையடுத்து பீஸ்ட் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சாணிக்காயிதம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்துடன் தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X