டிரெஸ் அட்ஜெஸ்ட் பண்ணாக் கூடா ஜூம் பண்ணி பார்க்குறாங்க.. வாணி போஜன் பளிச் பேட்டி!
சென்னை: செங்களம் வெப்சிரீஸில் நடித்துள்ள வாணி போஜன் சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நீயெல்லாம் ஏன் நடிக்கிற என தனது காது படவே கேட்டார்கள் என்றும் சோஷியல் மீடியா அப்யூஸுக்கு இது தான் என் பதில் என ஏகப்பட்ட விஷயங்களை துணிச்சலாக பேசி உள்ளார் வாணி போஜன்.
ஜீ5ல் வெளியாகி உள்ள செங்களம் வெப்சீரிஸில் அரசியல்வாதியாக நடித்துள்ளார் வாணி போஜன். இந்த வெப்சீரிஸில் கலையரசன் லீடு ரோலில் நடித்துள்ளார்.

வெப்சீரிஸில் வாணி போஜன்
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியலில் நடித்து பிரபலமான வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வாணி போஜன் ட்ரிப்பிள்ஸ் வெப்சீரிஸை தொடர்ந்து செங்களம் வெப்சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப்சீரிஸை சுந்தர பாண்டியன், சத்ரியன் படங்களை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கி உள்ளார்.

அரசியல்வாதியாக
ஓ மை கடவுளே படத்தில் மீராவாக நடித்து இளைஞர்களை கவர்ந்த வாணி போஜன் இந்த வெப்சீரிஸில் அரசியல்வாதி சூர்யா கலாவாக நடித்துள்ளார். கலையரசன் ராயர் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 9 எபிசோடுகள் கொண்ட இந்த வெப்சீரிஸ் அரசியல் த்ரில்லராக உருவாகி உள்ளது. இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம தீனியை இந்த வெப்சீரிஸ் போடும் என பேசி உள்ளார் வாணி போஜன்.

சோஷியல் மீடியா அப்யூஸ்
வாணி போஜனுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவுக்கு சோஷியல் மீடியாவில் ஹேட்டர்களும் உள்ளனர். ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்டுகளும், நீங்க எல்லாம் ஏன் சினிமாவில் நடிக்க வந்தீங்க என்கிற ட்ரோல்களும் அப்யூஸ்களும் அதிகம் இருப்பதாகவும் அதனை பார்த்து முதலில் பயந்தேன். குறிப்பாக என் அப்பா, அம்மா தப்பான கமெண்ட்டை படித்து விடக் கூடாது என நினைத்தேன். ஆனால், இப்போதெல்லாம் அதனை ஃபேஸ் பண்ணும் தைரியம் வந்து விட்டது என போல்டாக பேசியுள்ளார்.

சேலையை சரி செய்தாலும்
சும்மா நிகழ்ச்சிகளில் ஒரு சேலையை சரி செய்தாலும், அதனை ஜூம் செய்து வீடியோவாக எடுத்துப் போட்டு ஆபாச கமெண்ட்டுகளை அடிக்கும் விஷமிகளும் உள்ளனர். ஆனால், அவர்களை எல்லாம் அப்படியே கடந்து செல்ல வேண்டும் நாமும் அவர்களுக்கு இணையாக இறங்கி அப்யூஸ் கமெண்ட்டுகளை போட்டுக் கொண்டால் நாம் சந்தோஷமாகவே இருக்க முடியாது என ஓபனாக பேசி உள்ளார்.

ஹீரோயின் ஃபீல் வந்ததே இல்லை
இந்த வெப்சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான ரோலில் நடித்துள்ளேன். சினிமா, வெப்சீரிஸ் என நடித்தாலும் இதுவரை அந்த ஹீரோயின் ஃபீலே வந்தது கிடையாது. எங்கே வெளியே சென்றாலும் மீரா அக்கா என்று அன்போடு ரசிகர்கள் அழைக்கின்றனர். சீரியலில் பார்த்தவர்கள் தங்கள் வீட்டு மகளாகவே பார்க்கின்றனர், அது எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது என்றார்.

அப்ஸ் அண்ட் டவுன்ஸ்
சினிமாவில் நிறைய அப்ஸ் அண்ட் டவுன்ஸ் பார்த்து விட்டேன். ஒவ்வொரு புதிய படங்கள் வெளியாகும் போது, அப்போது சந்தோஷமாக இருக்கும். அந்த படம் ஓடுகிறதோ, இல்லையோ அந்த தருணம் மகிழ்ச்சியான தருணம் தான். தொடர்ந்து உழைக்கவும் இந்த வாழ்க்கை நம்மை எங்கே தான் கொண்டு செல்கிறது என்பதை பார்த்து விடலாம் என அப்படியே சென்றுக் கொண்டிருக்கிறேன் என்றும் வாணி போஜன் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











