ஓடிடி ரிலீஸ்.. கவனம் ஈர்க்கும் செங்களம் ட்ரெய்லர் - பொறாமைப்பட்ட அமீர்

சென்னை: எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகவிருக்கும் செங்களம் வெப் தொடரின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கொரோனா காலத்தில் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்த ஓடிடிக்கள் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்திருக்கின்றன. வருட சந்தா கட்டினால் போதும் குடும்பத்தோடு வீட்டிலேயே இருந்தபடி படங்களையோ, வெப் சீரிஸ்களையோ பார்க்கலான் என்பதால் அதற்கான மவுசு அதிகரித்திருக்கிறது.

ஓடிடியில் அதிகம் வெளியாகும் வெப் தொடர்கள்

ஓடிடியில் அதிகம் வெளியாகும் வெப் தொடர்கள்

ஓடிடியை பொறுத்தவரை தமிழில் முழு முதலாக இறங்கியது நடிகர் சூர்யாதான். அவர் நடித்த சூரரைப் போற்று படமும், ஜெய் பீம் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அதனையடுத்து பலரும் படங்களை ஓடிடி நிறுவனங்களிடம் நேரடியாக கொடுக்கும் வழக்கம் அதிகரித்தது. அதனையடுத்து வெப் சீரிஸ்கள் மீது ரசிகர்களுக்கு மோகம் அதிகரிக்க ஏகப்பட்ட வெப் சீரிஸ்கள் ஓடிடியில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அப்படி வெளியாகும் வெப் சீரிஸ்கள் ஹிட்டாகவும் செய்கின்றன. வெற்றிமாறனேக்கூட வடசென்னை 2வை வெப் சீரிஸாக இயக்கவிருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

ஓடிடிக்கு தாவும் பிரபலங்கள்

ஓடிடிக்கு தாவும் பிரபலங்கள்

சமீபத்தில் வெற்றிமாறன் பேட்டைக்காளி என்ற வெப் சீரிஸை தயாரித்திருந்தார். இதனையடுத்து பிரபல இயக்குநர்களும், நடிகர்களும் ஓடிடி வெப் சீரிஸ் மீது தங்களது கவனத்தை திருப்பியிருக்கின்றனர். மூன்று மணி நேரத்தில் சொல்ல முடியாததை 8 எபிசோடுகளாக வெப் சீரிஸில் சொல்லலாம் என்பதால் படைப்பாளிகள் மத்தியில் வெப் சீரிஸுக்கு மதிப்பு அதிகரித்துள்ளது.

கவனம் ஈர்க்கும் செங்களம் ட்ரெய்லர்

கவனம் ஈர்க்கும் செங்களம் ட்ரெய்லர்

அந்தவகையில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஆர்.பிரபாகரனும் தற்போது ஓடிடியில் குதித்துள்ளார். அவரது இயக்கத்தில் செங்களம் என்ற வெப் சீரிஸ் தயாராகியுள்ளது. இந்த வெப் சீரிஸில் கலையரசன், வாணி போஜன் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அவர்களுடன் வேலராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

வெப் சீரிஸின் மையக்கரு

வெப் சீரிஸின் மையக்கரு

மதுரை, விருதுநகர் வட்டாரத்தில் அரசியல் அதிகாரத்திற்காக இரு குடும்பங்களுக்குள் நடக்கும் போட்டியும், அதன் விளைவாக நடக்கும் கொலைகளும் இந்த வெப் சீரிஸின் மையக்கரு என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. இந்த வெப் சீரிஸானது மார்ச் 24ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் அமீரின் பொறாமை

இயக்குநர் அமீரின் பொறாமை


இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் அமீர், "ஒரு கலைஞனுக்கு மற்றொரு கலைஞனின் படைப்பை பார்த்து பொறாமைப்பட்டாலே அது நல்ல படைப்பு. இதன் ட்ரெய்லரை பார்த்தபோது இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று எனக்கு பொறாமை ஏற்பட்டது.

அமீரை கவர்ந்த இசை

அமீரை கவர்ந்த இசை

செங்களம் ட்ரெய்லரில் முதலில் என்னை கவர்ந்தது இசைதான். மிகச்சிறப்பாக இசை அமைக்கப்பட்டிருக்கிறது. காட்சிகளும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன. இதில் நடித்திருக்கும் நடிகர்கள் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. ஜீ5 ஓடிடி தளம் தொடர்ந்து நல்ல படைப்பை தந்துகொண்டிருக்கிறது. அந்த ஓடிடி தளத்திற்கு செங்களம் வெற்றி படைப்பாக அமையும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X