பணத்திற்கு விலை போகும் தாய்.. 40 சிறுமிகளை கொடூரமாக கொலை செய்யும் மகள்கள்.. திகிலூட்டும் படம்!

சென்னை: இயக்குனர் சுமன் முகோபாத்யாய் இயக்கத்தில் மஹி கில், சயானி குப்தா, ராகினி கன்னா ஆகியோர் நடிப்பில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட தொடர் கொலைகள் மற்றும் ஒரு திகிலூட்டும் திரைப்படம் தான் "Posham Pa". ஒரு மோசமான அம்மாவால் இரண்டு மகளின் வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது என்பதை இந்த படம் காட்டுகிறது.

அமெரிக்க படங்களிலும், தொடர்களிலும் தொடர்கொலைகாரர்களைப் பற்றி பல படத்தை நாம் பார்த்து இருப்போம். இப்படிப்பட்ட படங்களை நாம் ஏன் எடுப்பது இல்லை என்ற வருத்தத்தை போக்கும் வகையில் தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொடர்கொலைகாரிகளாக குற்றம் நிரூபிக்கப்பட்ட அஞ்சனா கவித், சீமா கவித் மற்றும் ரேணுகா ஷிண்டே ஆகியோர் ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக மரண பெற்று சிறையில் அடைக்கப்பட்டனர். குழந்தைகள் காணாமல் போவதும், அவர்கள் கொல்லப்படுவதும் நீடித்து வந்த நிலையில், 1996ஆம் ஆண்டு அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Posham Pa movie review OTT
Photo Credit:

உண்மை கதை: தாய் அஞ்சனா கவித் 1997ஆம் ஆண்டு சிறையிலேயே உயிரிழந்தார். 2006ஆம் ஆண்டு சீமா மற்றும் ரேணுகாவிற்கு மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. 2014ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் மன்னிப்பு மனுவை நிராகரித்தார். இதையடுத்து, 2022 ஆம் ஆண்டு அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தற்போது சகோதரிகள் புனேவில் உள்ள எரவாடா சிறையில் உள்ளனர். இப்படி கொடூரமான உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதை தான் "Posham Pa". இப்படத்தில், திரில்லுக்காக பல காட்சிகள் கற்பனைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

உடலை விற்கும் தாய்: படத்தின் கதை ஆரம்பிக்கும் போது, கொடூர கொலை குற்றம் செய்தவர்கள் பற்றிய ஆவணப்பட இயக்குநர்களான நிக்ஹத் மற்றும் குண்தீப் இருவரும் சிறைக்குள் வருகின்றனர். சிறையில் ரேகாவை சந்தித்து எதற்கான 40 சிறுமிகளை கொடூரமாக கொலை செய்தீங்க என்று கேட்க, அப்போது மனதளவில் பாதிக்கப்பட்ட ரேகா. சிறு வயதில் தன் சந்தித்த கொடுமைகளை சொல்கிறாள், பணத்திற்காக உடலை விற்கும் அம்மா ப்ரஜக்தா (Mahie Gill) ஆண்களை வீட்டிற்கே அழைத்து வந்து தன் கண்முன்னே அந்த அசிங்கத்தை செய்வாராம். சிறுவயதில் பசிக்காக ஏங்கி அழுத போது கொடூரமாக அடித்து தெருத்தெருவாக விரட்டுவாராம். பசி தாங்கமுடியாமல் குப்பை தொட்டியில் கிடக்கும் உணவை பல நாள் நான் சாப்பிட்டு இருக்கிறேன் என்கிறார்.

Posham Pa movie review OTT
Photo Credit:

சிறுமிகள் கொலை: ரேகாவிடம் தொடங்கிய விசாரணை அடுத்து ரேகாவின் தங்கை ஷிகாவிடம் செல்கிறது. என் தாய் ஒரு கொடூரமான தாய். அவள் பணத்திற்காகவும், உடல் தேவைக்காகவும் ஆண்களை வீட்டுக்கு அழைத்து வருவாள். வீட்டில் எங்கள் முன்னே அந்த ஆணுடன் அசிங்கமாக நடந்து கொண்டு பின் அவர்களிம் இருந்து பணம், நகையை பிடிங்கிக்கொண்டு கொலை செய்து விடுவாள். அதோடு மட்டுமில்லாமல் தன்னையும் அக்காவையும் பிச்சை எடுக்கவும், திருடவும் கட்டாயப்படுத்தி அடித்து துன்புறுத்தினார். அம்மாவின் அடியை தாங்க முடியாமல், பிச்சை எடுத்தது மட்டுமில்லாமல், பல குழந்தைகளை கடத்தி அவர்களை கொடூரமாக கொலை செய்தோம். இப்படியே பல ஆண்டுகள் கொலை செய்தோம் என ஷிகா, அம்மாவுடன் சேர்ந்து செய்த கொலைகளை சொல்வது போல கதை நகர்கிறது.

ஆனால், சகோதரிகள் உண்மையில் குற்றவாளிகளா? அம்மா மூளை சலவை செய்து பெற்ற மகள்களை பலியாக்கினாரா? என்ற முடிவே இல்லாமல் கடைசியில் கதை முடியும். சிவப்பு ரோஜாக்கள், Raman Raghav 2.0 போன்ற படங்களைப் போல, Posham Pa படம் மனநிலையை ஆராச்சி செய்யும் படமாகும். வித்தியாசமான படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை பார்க்கலாம். இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X