Seruppugal Jaakirathai: செருப்புகள் ஜாக்கிரதை விமர்சனம்.. சிங்கம்புலியின் காமெடி வெப்சீரிஸ் எப்படி?
சென்னை: ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள 'செருப்புகள் ஜாக்கிரதை' வெப்சீரிஸ் சிரிக்க வைத்ததா? அல்லது சீரியஸ் ஆக்கியதா? என்பது தொடர்பான விமர்சனத்தை இங்கே காணலாம் வாங்க..
மகாராஜா படத்தில் நெகட்டிவ் ரோலில் மிரட்டிய சிங்கம்புலி இந்த வெப்சீரிஸில் லீடு ரோலில் நடித்துள்ளார். அவரது மகனாக விவேக் ராஜகோபால் நடித்துள்ளார். மேலும், ஐரா, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளனர்.

யோகிபாபுவின் சட்னி சாம்பார் உள்ளிட்ட நகைச்சுவை வெப்சீரிஸ்கள் வெளியான நிலையில், 2.30 மணி நேரம் கொண்ட கதையை 6 எபிசோடுகளாக மாற்றி இந்த வெப்சீரிஸை இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் கொடுத்திருக்கிறார். ஓடிடி ரசிகர்களுக்கு வொர்த்தான வெப்சீரிஸா? அல்லது ஒருமுறையாவது ட்ரை பண்ணலாமா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க..
செருப்புகள் ஜாக்கிரதை கதை: பழைய படங்களில் செருப்பில் தங்கம் அல்லது வைரத்தை கடத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதுபோல செருப்பு ஒன்றில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை கடத்துகின்றனர். அது எதிர்பாராமல் சிங்கம்புலியின் கால்களுக்கு வருகிறது. அவரது வீட்டுக்கு வந்த அந்த மகாலட்சுமியை அவருடைய அருமை மகன் வேலைக்காரனான லொள்ளு சபா மனோகரனுக்கு தானமாக கொடுத்துவிட பாரில் ஃபுல் போதையில் இருக்கும் லொள்ளு சபா மனோகரை தனது மகனுடன் சேர்ந்து தேடி போகிறார் சிங்கம்புலி. செருப்பில் வைரம் இருக்கும் விஷயத்தை அவர் தெரிந்துக் கொண்ட நிலையில், அவரை போலீஸ் அதிகாரி ஒருவரும் ஃபாலோ செய்கிறார். வைரம் இருந்த செருப்பை கடைசி வரை சிங்கம்புலி மற்றும் அவரது மகன் கண்டுபிடித்தார்களா? அல்லது இவர்களையும் அந்த வைரங்கள் மறைக்கப்பட்ட செருப்பையும் போலீஸார் பிடித்தார்களா? இல்லையா? என்பதை 6 எபிசோடுகளாக நீட்டி முழக்கி இயக்குநர் கூறியுள்ளார்.
பார்க்கலாமா? வேண்டாமா?: குறைந்த பட்ஜெட்டில் இந்த காமெடி வெப்சீரிஸை உருவாக்கியுள்ளனர். குறும்படம் மற்றும் சீரியல் பார்த்த உணர்வைத்தான் தருகிறது. சிங்கம்புலி மற்றும் லொள்ளு சபா மனோகரன் நடிப்பு மட்டுமே இந்த வெப்சீரிஸை பார்க்கும் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமையும். கடைசி வரை அந்த காணாமல் போன செருப்பை தேடி அலைவது மட்டுமே கதையாக உள்ளதால் ஒரே குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதை போன்ற உணர்வு தான் வருகிறது. இன்னமும் இந்த வெப்சீரிஸை மெருகேற்றி எடுத்திருந்தால் தாராளமாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஒரு ஓடிடி படைப்பாக கொடுத்திருக்க முடியும். வீட்டில் இந்த வாரம் ஃப்ரீயாக இருந்தால் ஜீ5 சப்ஸ்க்ரிப்ஷன் இருந்தால் தாராளமாக ஒருமுறை முயற்சி செய்யலாம்.


Click it and Unblock the Notifications











