OTTக்கே ஓனராகும் நடிகர்கள்.. சூடு பிடிக்கும் பிசினஸ்.. ஷாருக்கானின் SRK+ ஓடிடி விரைவில் வருதாம்!

மும்பை: ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்வதே தற்போது பழைய கதை ஆகி விட்டதாம். சொந்தமாக ஓடிடி தளங்களை தொடங்க நடிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நாடு முழுவதும் பல முன்னணி நடிகர்கள் ஓடிடி பிசினஸில் குதித்து வரும் நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கானும் இந்த OTT (Over The Top) வியாபார களத்தில் களமிறங்கி உள்ளார்.

தனது புதிய ஓடிடி நிறுவனமான SRK+ விரைவில் வரப் போவதாக அறிவித்து அவர் போட்டிருக்கும் ட்வீட் டிரெண்டாகி வருகிறது.

ஆஹா ஓடிடி

ஆஹா ஓடிடி

தெலுங்கில் ஆரம்பித்து தமிழிலும் சக்கைப் போடு போட்டு வரும் ஆஹா ஓடிடியை நடிகர் அல்லு அர்ஜுன் தனது தந்தை அல்லு அரவிந்த் பெயரில் நடத்தி வருவதாக கூறுகின்றனர். தயாரிப்பாளரான அல்லு அரவிந்தின் ஓடிடியில் ரைட்டர், ஆகாசவாணி, மிக மிக அவசரம் என ஏகப்பட்ட அருமையான படைப்புகள் எல்லாம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா ஷர்மா

அனுஷ்கா ஷர்மா

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா 2023ம் ஆண்டு தொடக்கத்தில் Clean OTT எனும் செயலியை அறிமுகப்படுத்த காத்திருக்கிறார். அதில், முழுக்க முழுக்க பெண்கள் சார்ந்த படங்களும், வெப்தொடர்களும் இடம்பெறும் என கூறப்படுகிறது. மேலும், ஏகப்பட்ட பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஓடிடி பிசினஸ் பக்கம் ஒதுங்கி வருகிறார்களாம்.

கோடிகளை குவிக்கும் பிசினஸ்

கோடிகளை குவிக்கும் பிசினஸ்

உலகளவில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் ஓடிடி வியாபாரத்தில் கோடிக் கணக்கில் லாபத்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட கொரோனா சூழலை பயன்படுத்திக் கொண்டு சம்பாதித்தன. அதே ரூட்டை பின்பற்றி ஏகப்பட்ட முன்னணி நடிகர்களும் தயாரிப்பு நிறுவனங்களை போல ஓடிடி நிறுவனங்களையும் தொடங்க ஆரம்பித்து விட்டனர்.

ஷாருக்கானின் புதிய ஓடிடி

ஷாருக்கானின் புதிய ஓடிடி

ஷாருக்கான் நடித்த படங்கள் எதுவுமே இதுவரை நேரடியாக ஓடிடியில் வெளியாகாத நிலையில், புதிதாக ஓடிடி நிறுவனம் ஒன்றையே ஆரம்பித்துள்ளார் நடிகர் ஷாருக்கான். SRK+ என பெயரிடப்பட்டுள்ள அந்த ஓடிடி தளம் விரைவில் புழக்கத்திற்கு வரும் என தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக ட்வீட் போட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

பதானில் பிசி

பதானில் பிசி

மகன் ஆர்யான் கான் கைது செய்யப்பட்ட நிலையில், கவலையில் இருந்த ஷாருக்கான் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது சல்மான் கானின் டைகர் 3 படத்தில் கேமியோ ரோல், இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் என பிசியாகி உள்ளார். இந்நிலையில், அடுத்ததாக ஓடிடி பிசினஸிலும் ஆர்வம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார்.

அட்லி படம் டிராப்பா?

அட்லி படம் டிராப்பா?

ஷாருக்கான் படத்தை இயக்கப் போவதாக அறிவித்து பாலிவுட் புறப்பட்ட இயக்குநர் அட்லி கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கே காத்திருந்தது தான் மிச்சன் என்கின்றனர். மேலும், அந்த படத்தை மொத்தமாக ஷாருக்கான் கைவிட்டு விட்டார் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ஷாருக்கான் தயாரிப்பில் தொடர்ந்து 3 படங்களை இயக்கப் போகிறார் அட்லி என பேச்சுக்கள் அடிபட்டன. ஒருவேளை எல்லாமே இந்த ஓடிடி தளத்திற்கு தான் என்று சொன்னதுமே ஆளவிடுங்கப்பா சாமி என கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டாரா அட்லி என்றும் கோடம்பாக்கத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X