Jawan: நெட்பிளிக்சில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம்.. ஓடிடியில் சாதனை படைத்த ஜவான்!

சென்னை: நெட்பிளிக்சில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் பெற்றுள்ளது.

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ முதன்முதலாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார்.

Shah Rukh Khan’s Jawan movie is still breaking records, this time on OTT

அதில் நயன் தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். ஷாருக்கானே படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.

பதான்: ஷாருக்கானின் நடிப்பில் ஜவானுக்கு முன்னதாக வெளியான பதான் படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. எனவே இந்தப் படமும் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும் என ஷாருக்கின் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள்.

ஷாருக்கானின் ஜவான்: ஜவான் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வந்தது. இந்தியாவில் மட்டும் 26 நாளில் ரூ.611 கோடி வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.1100 கோடி வசூலைத் தொட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிகம் வசூலித்த 2வது இந்தி படமாக ஜவான் உள்ளது.

படத்தின் காப்பி: ஜவான் படம் தென்னிந்திய அளவில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஆனால், இந்தி மொழி பேசும் மாநிலங்களில் ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திரைப்படம் ஏ ஆர் முருகதாஸ் படத்தின் காட்சிகளையே ஷாருக்கானின் காட்சியை ஜவான் படத்திற்காக அட்லீ சுட்டு வைத்துள்ளார் என பல விமர்சனம் எழுந்ததால், இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்ந்திய மொழிகளில் எதிர்ப்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்யவில்லை.

மோசமான விமர்சனம்: படத்திற்கு படு மோசமான விமர்சனம் வந்த போதும், ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்தையும் எப்படி இருந்தாலும் வழக்கம்போல தனது படத்தை டாப் டக்கராக ரசிகர்களுக்கு ஏற்ற விசுவல் ட்ரீட்டாக இயக்குனர் அட்லி கொடுத்து அசத்தி விட்டதால், படம் வசூலை அள்ளியது.

நெட்பிளிக்சில் சாதனை: இந்நிலையில் ஜவான் திரைப்படம் நெட்பிளிக்சில் நேற்று வெளியானது. இது அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை படைத்துள்ளது. அதன்படி 'ஜவான்' திரைப்படம் இதுவரை 1 கோடியே 40 லட்சம் மணி நேரங்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X