ஓடிடியில் வெளியானது பதான்.. தீயாக பரவும் தீபிகா படுகோன் பிகினி குளியல் சீன்.. செம டிரெண்டிங்!
மும்பை: பாய்காட் பாலிவுட் ஹாஷ்டேக் மூலமாக இந்தி படங்களுக்கு எமனாக திடீர் டிரெண்டிங் பல படங்களை காவு வாங்கியது. அந்த நேரத்தில் நல்ல படத்தை கொடுத்தால் அதெல்லாம் வெறும் மாயை மட்டுமே என்பதை பாலிவுட்டுக்கே உணர்த்தும் விதமாக பதான் படத்தை வெளியிட்டு பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் தனது கோட்டையை நிலை நாட்டினார் ஷாருக்கான்.
ஜனவரி 25ம் தேதி குடியரசு தின ரிலீஸாக வெளியனா பதான் திரைப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி இமாலய சாதனையை படைத்தது.
இந்நிலையில், ஓடிடி தளத்தில் கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழித்து இன்று வெளியாகி உள்ளது.

எந்த ஓடிடியில்
ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப்பை வைத்து வார் படத்தை இயக்கி 400 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்திய இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஜனவரி 25ம் தேதி ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

பாகுபலி 2 வசூல் முறியடிப்பு
தென்னிந்திய படங்களான பாகுபலி 2ம் பாகம், கேஜிஎஃப் 2 மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்தி பெல்ட்டில் அதிக வசூல் உடன் முதலிடத்தை பிடித்து இருந்தன. 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரம்மாஸ்திரா படமே 400 கோடி வரை தான் வசூல் செய்து எந்த சாதனையையும் புரியாமல் போன நிலையில், பாகுபலி 2 இந்தி வசூல் சாதனையை பதான் முறியடித்து மாஸ் காட்டியது. ஒட்டுமொத்தமாக 1000 கோடி வசூலை ஷாருக்கானின் பதான் தாண்டியது.

எதிர்ப்புகளை தாண்டி
இந்த படத்துக்கும் பாய்காட் கேங் கடும் எதிர்ப்புகளை கொண்டு வந்தன. மேலும், பதான் படத்தில் இடம்பெற்ற பெஷாராம் ரங் பாடலில் நடிகை தீபிகா படுகோன் அணிந்திருந்த ஆரஞ்சு பிகினியை காவி பிகினி அணிந்துள்ளார் என சர்ச்சையை கிளப்பி பெரும் போராட்டங்கள் வெடித்தன. அத்தனை தடைகளையும் மீறி ஷாருக்கான் இப்படியொரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.

டிரெண்டிங்கில் டான்
ஷாருக்கானின் பதான் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் இன்று வெளியாகி உள்ள நிலையில், #PathaanOnPrime ஹாஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. ஷாருக்கானின் பதான் படத்தின் காட்சிகளை ஓடிடி ரசிகர்கள் அமேசான் பிரைமில் இருந்து ஹெச்டியில் கட் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.

தீபிகா படுகோன் பிகினி குளியல்
பதான் படத்தின் எக்கச்சக்கமாக பிகினி உடைகளில் பிபியை எகிற வைத்திருக்கிறார் நடிகை தீபிகா படுகோன். நீச்சல் குளம் அருகே வந்து ஆடையை கழட்டி விட்டு ஷாருக்கானுக்கு முன்னாடி பிகினி குளியல் போடும் காட்சிகளை அப்படியே ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஷாருக்கான் ட்வீட்
பதான் உடன் இந்த வார பார்ட்டியை கொண்டாடுங்க என நடிகர் ஷாருக்கானும் பதான் பிரைமில் வெளியான அறிவிப்பை வெளியிட்டு ட்வீட் போட்டுள்ளார். அடுத்து ஜவான் படத்தை சீக்கிரமாக ரிலீஸ் செய்யுங்க ஷாருக்கான் என அட்லீ ரசிகர்கள் மற்றும் பாலிவுட் ரசிகர்கள் பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











