Dunki: நெட்பிளிக்ஸில் முதல் நாளிலேயே அதிரடி காட்டிய டங்கி.. ரசிகர்கள் குஷி!
சென்னை: 2023-ம் ஆண்டு மிகவும் கொண்டாடப்பட்ட நடிகர் என்றால் அது ஷாருக்கான் தான். அவர் நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பதான், ஜவான் என இரண்டு படங்கள் வெளியாகி சச்சைப்போடு போட்ட நிலையில் மூன்றாவதாக வெளியான டங்கி திரைப்படம் வசூலை அள்ளியது. டிசம்பர் மாதம் தியேட்டரில் வெளியானத் திரைப்படம், காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இத்திரைப்படம் முதல் நாளிலேயே டாப் ஐந்து இடத்தை பிடித்துள்ளது.
முன்னாபாய், த்ரீ இடியட்ஸ், பிகே போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிவர். முதல் முறையாக ஷாருக் மற்றும் ஹிரானி டங்கி திரைப்படம் மூலம் இணைந்தனர். பதான் மற்றும் ஜவான் படங்களில் இருந்த மாஸ் மசாலா கமர்ஷியல் அம்சங்கள் இந்த படத்திலும் இருந்தாலும், டங்கி முழுக்க முழுக்க ஹிரானியின் படமாக இருந்தது.இந்த படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதினர். டங்கிபடம் டிசம்பர் 21ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப்பதித்தது.
டங்கி: இந்த திரைப்டபம் இந்தியில் மட்டுமே வெளியானாலும், இரண்டு பெரிய வெற்றிகளுக்குப் பிறகு வெளியாகும் ஷாருக்கின் படம் என்பதாலும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் ஹிரானியின் படம் என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு மிக அதிகமாகவே இருந்தது. பல நாடுகளைக் கடந்து சட்ட விரோதமாக பிரிட்டனுக்குள் நுழைய முயலும் நான்கு பேரின் கதையை தனக்கே உரிய பாணியில் படமாக்கியிருந்தார் இயக்குநர்.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில்: முதல் நாளிலேயே 58 கோடி ரூபாய்க்கு மேல் கலெக்ஷனை அள்ளியத் இத்திரைப்படம் பத்து நாட்களிலேயே 100 கோடியை வசூலித்த இத்திரைப்படம் மொத்த ரூ470 கோடியை வசூலித்தது. படம் வெளியாகி இரண்டு மாதத்திற்கு பிறகு இத்திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு, ஷாருக்கானின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேற்று வெளியானது. டங்கி படம் வெளியான சில மணி நேரங்களிலேயே, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பிரபலமான திரைப்படங்களின் பட்டியலில் டங்கி நுழைந்தது. தற்போது டங்கி படம் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. இது ஷாருக்கானின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications