Shahmaran Review: நம்ம ஊரு பாம்பு படங்களே தோற்று விடும்.. ஓடிடியில் அப்படியொரு துருக்கி வெப்சீரிஸ்!

சென்னை: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் துருக்கி நாட்டில் உருவான அட்டகாசமான வெப்சீரிஸான ஷாமரன் அதன் இரண்டாம் சீசனை இந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஷாமரன் முதல் சீசன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அதன் 2வது சீசனில் ஷாஷு நாக மோகினியாக மாறி நிற்கும் கடைசி காட்சியுடன் வெப்சீரிஸ் நிறைவடைகிறது.

இயக்குநர் உமர் துராகாய் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த வெப்சீரிஸின் முதல் சீசன் வெளியானது. அதன் அடுத்த சீசன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளது.

shahmaran review


செரினாயா சரிகாயா எனும் துருக்கி நாட்டு நடிகை தான் இந்த வெப்சீரிஸில் நாக மோகினியாக நடித்துள்ளார். சாதாரண கல்லூரி பேராசிரியையாக இருக்கும் அவரை சுற்றி நடக்கும் அதிசய நிகழ்வுகளும் கடைசியில் அவரே ஒரு நாகம் தான் என்பது ரிவீல் ஆகும் காட்சிகள் என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த வெப்சீரிஸ் பற்றிய விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

ஷாமரன் கதை: தனது அம்மாவை தனியாக தவிக்க விட்டுச் சென்ற தாத்தாவை தேடி இஸ்தான்புல்லில் இருந்து துருக்கியின் நகரமான அடானாவிற்கு நாயகி வருகிறார். அங்கே கல்லூரி ஒன்றில் ஆசிரியராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் மாறன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருமே நாகங்கள் தான். ஆனால், அவர்களின் பணியே ஹீரோயின் ஷாஷுவை அவருக்கே தெரியாமல் மறைமுகமாக காப்பாற்றுவது தான்.

shahmaran review


ஷாஷுவை பழிவாங்க அவரது தங்கையான லிலித் (சாடேட் இசில் அக்சோய்) ஷாமரன் என்பதே தெரியாமல் இருக்கும் ஷாஷுவை கொல்ல திட்டமிடுகிறார். அவருக்கு பாதுகாவலாக இருக்கும் ஹீரோவின் குடும்பத்தையே கொல்கிறார். கடைசியாக ஷாஷு ஷாமரனாக மாறினாரா? லிலித்தை பழிவாங்கினாரா? என்பது தான் இந்த ஷாமரன் கதை.

பார்க்கலாமா? வேண்டாமா?: பாம்புகளை காட்டும் சிஜி காட்சிகளில் இருந்து கிளைமேக்ஸில் பாதி மனுஷி, பாதி பாம்பாக படமெடுத்து நிற்கும் ஷாமரனை பார்க்கவே தாராளமாக இந்த வெப்சீரிஸை பார்க்கலாம். ஓடிடி தொடர்கள் என்றாலே சுற்றி வளைத்து ஸ்லோ மோஷனில் நிறைய சீன்களை வைத்து மினி சீரியல் பாணியிலேயே படமாக்கி இருப்பார்கள். அதே போன்ற விஷயங்கள் இதில், இருந்தாலும் ஒரு லவ் ரொமான்டிக் மற்றும் மாயாஜாலக் காட்சிகள், கடைசி வரை என்ன ஆகும் என்கிற பதைபதைப்பு உள்ளிட்டவைகளை அடுக்கி இயக்குநர் கொடுத்துள்ளார்.

shahmaran review

மோனிகா பெல்லூசி போல லீடு ரோலில் நடித்துள்ள ஹீரோயினின் அந்த மயக்கும் அழகை காணவே இளைஞர்கள் நிச்சயம் இந்த வெப்சீரிஸை கண்டுகளித்து விடுவார்கள். நிர்வாணக் காட்சிகள் ஆபாசமாக இல்லாமல், அளவுடனே வெப்சீரிஸ் முழுக்க நிறைந்திருக்கிறது. துருக்கி வெப்சீரிஸிலும் இதெல்லாம் சாதாரணமாக மாறி ரொம்ப காலம் ஆகி விட்டது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

வில்லியாக லிலித் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அந்த நடிகையின் உடையை யார் டிசைன் செய்தார் என்றே தெரியவில்லை, வெறும் ஸ்க்ரீன் துணியை மாட்டிக் கொண்டு ஹீரோயினை விட படுகிளாமராக உள்ளார். முதல் சீசனில் ஹீரோயின் கனவில் நிர்வாணமாக நாகங்கள் சூழ ஒரு பாத் டப்பில் இருக்கும் பெண் கடைசியில் வில்லி லிலித் தான் என்பதை இரண்டாவது சீசனில் ரிவீல் செய்யும் இடமும் அட்டகாசமாக அமைந்துள்ளது. ஒரு வருடத்திலேயே 2வது சீசனை வெளியிட்டது ரசிகர்களை ஹேப்பியாக்கியுள்ளது. அடுத்த சீசனுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். துருக்கி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்த வெப்சீரிஸ் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X