காமம் தான் முதலில்.. ஒன் நைட் ஸ்டாண்ட் அதிகரிச்சுடுச்சு.. சாக்லேட் ஃபேண்டஸி.. ஷாலு ஷம்மு ஓபன்!
சென்னை: ஆஹா ஓடிடியில் ஐஸ்வர்யா தத்தா, சோனியா அகர்வால், இனியா மற்றும் ஸ்ரீகாந்த் என ஏகப்பட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ள கில்மா படமாக உருவாகியுள்ள ’ஷ்’ படத்தை புரமோட் செய்யும் விதமாக ஆஹா ஓடிடி நிறுவனம் ஷாலு ஷம்மு உள்ளிட்ட சில இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர்களை வைத்து அன்சென்சார்டு அரட்டையை அரங்கேற்றி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிருத்வி ஆதித்யா, ஐபி கார்த்திகேயன், வள்ளி மோகன்தாஸ், ஹரீஷ் என 4 டைரக்டர்கள் இணைந்து 4 விதமான கதைகளை உருவாக்கி ஒரே படமாக 'ஷ்’ எனும் டைட்டிலில் ஆஹா ஓடிடியில் வெளியிட்டுள்ளனர். தமிழில் உடலுறவு தொடர்பான படங்கள் அதிகளவில் வராத நிலையில், இந்த படம் முழுக்க முழுக்க அதை பற்றியே பேசுவதால் ஏகப்பட்ட இளைஞர்கள் ஆஹா ஓடிடியை சப்ஸ்கிரைப் செய்து பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த படத்தை மேலும், இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் ஆஹா ஓடிடி நிறுவனம் யூடியூபில் ஷாலு ஷம்மு, பிரியங்கா நாயர் மற்றும் அரோரா சின்க்ளேர் உள்ளிட்ட இன்ஃப்ளூயன்ஸர்களுடன் நடத்திய அன்சென்சார் பேட்டியை வெளியிட்டுள்ளனர்.
ஷாலு ஷம்மு ஓபன் டாக்: ஷோவுக்கு பேரே அன்சென்சார்ட் ஷோ என வைத்துள்ள நிலையில், இரண்டாம் குத்து படத்தில் நடித்த நடிகை ஷாலு ஷம்மு செம ஓபனாக காமம் குறித்தும் ஒன் நைட் ஸ்டாண்ட் குறித்தும் பேசி இளைஞர்களை ஷாக் ஆக்கியுள்ளார். கவர்ச்சிகரமாக மேலாடையே அணியாமல் மார்பில் பூக்களை வைத்து மறைத்தும், ரோஜாக்களை கொட்டி பாத் டப்பில் படுத்தபடியும் போட்டோஷூட்களை நடத்தி மிரள வைத்த ஷாலு ஷம்மு முதலில் காமம் தான் வருகிறது. அதன் பின்னர் தான் காதல் உருவாகிறது என்று வெளிப்படையாக அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

பீச்சில் அது பண்ணனும்: அரோரா எனும் மற்றொரு இன்ஃப்ளுயன்ஸரும் காமம் மற்றும் காதல் குறித்து பேசியுள்ளார். ஃபேண்டஸி செக்ஸ் குறித்து அவர் பேசும் போது சாலை மற்றும் பீச்சில் மேட்டர் பண்ணனும்னு ஆசை இருக்கு எனக் கூறி பகீர் கிளப்பியுள்ளார். ஏற்கனவே ட்ரை பண்ணியிருக்கீங்க போலத் தெரியுதே என தொகுப்பாளினி கொக்கிப் போட வெட்கப்பட்டுக் கொண்டே ஆம் என்பது போல தலையாட்டி மேலும், அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இந்த காலத்து இளம் பெண்கள் எந்தளவுக்கு அந்த விஷயத்தில் வெளிப்படையாகவும் அட்வான்ஸாகவும் இருக்காங்க பாருங்களேன் என கண்டபடி கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.
சாக்லேட் ஃபேண்டஸி: ஷாலு ஷம்மு தனக்குப் பிடித்த ஃபேண்டஸி குறித்து வெளிப்படையாக பேசத் தயங்கியபடியே சாக்லேட் ஃபேண்டஸி செய்ய பிடிக்கும் என கமுக்கமாக சொல்ல, அப்படின்னா என்னடா வசனமே புரியலையேன்னு ரசிகர்கள் புரிந்தும் புரியாதது போல கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். சிலர் அடச்சீ கருமம் என்றும் புரிந்த நிலையில், கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ஒன் நைட் ஸ்டாண்ட் அதிகரிச்சுடுச்சு: முன்பெல்லாம் காதலித்துவிட்டு பின்னர் தான் காமம் பக்கம் போவார்கள். ஆனால், இப்போதெல்லாம் ஒன் நைட் ஸ்டாண்ட் ட்ரை பண்றாங்க. அதில், திருப்திகரமாக இருந்தால் அதன் பின்னர் டேட்டிங் போவது, காதல் செய்வது கடைசியில் அனைத்தும் கைகூடினால் கல்யாணம் வரை செல்வது என்றும் இல்லை என்றால் வேறு நபர்களை பார்ப்பது என மாறிவிட்டனர் என ஷாலு ஷம்மு பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











