Game Changer OTT: ஒரு மாசம் கூட ஆகல.. அதிரடியாக ஓடிடியில் வெளியாகும் ஷங்கரின் கேம் சேஞ்சர்!
சென்னை: இந்தியன் 2 படத்தின் தோல்வி ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்துக்கும் மிகப்பெரிய பின்னடைவாக மாறிவிட்டது. கடந்த மாதம் ஜனவரி 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியான ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் விரைவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படமே ஓடிடியில் சமீபத்தில் தான் வெளியானது. ஆனால், ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இவ்வளவு ஸ்பீடாக ஓடிடி தளத்துக்கு ஓடி வருகிறதே கேம் சேஞ்சர் என டோலிவுட் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தியேட்டரில் படத்தை மிஸ் பண்ண ரசிகர்கள் அனைவரும் ஓடிடி தளத்தில் கண்டிப்பாக இந்த படத்தை பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நெட்பிளிக்ஸ் அதிரடியாக பல பெரிய படங்களையும் வெப்சீரிஸ்களையும் வெளியிட்டு ரசிகர்களை திருப்திப்படுத்தி வரும் நிலையில், அமேசான் பிரைம் பல படங்களை ரென்ட்டில் போட்டு ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி வரும் நிலையில், கேம் சேஞ்சர் படம் இந்த வாரம் அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் என்கின்றனர்.
லீக்கான ஹெச்டி பிரிண்ட்: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, அஞ்சலி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியானது. படம் வெளியான உடனே லோக்கல் கேபிள் டிவியில் எல்லாம் அந்த படம் திரையிடப்பட்டு அதிர்ச்சியை கிளப்பியது. அதன் பின்னர், அந்த படத்தின் ஹெச்டி பிரிண்ட் வெளியாகி விட்டதாகவும், படக்குழுவே அதை லீக் செய்ததாகவும் சர்ச்சைகள் வெடித்தன.
100 கோடி நஷ்டம்: 400 கோடி தயாரிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் உலகளவில் 300 கோடி வரை வசூல் செய்ததாகவும் 100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக தெலுங்கு மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டு இருந்தன. கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கேம் சேஞ்சர் படம் சொதப்பினாலும் அவருக்கு சங்கராந்தி வஸ்துனம் படம் கைகொடுத்துவிட்டது. அந்த படம் தான் உண்மையாகவே 300 கோடி வசூல் செய்தது என்றும் கேம் சேஞ்சர் வசூல் அறிவிப்பு பொய் என்றும் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.
ஓடிடி ரிலீஸ் தேதி: இந்நிலையில், வரும் பிப்ரவரி 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகும் என்கிற அறிவிப்பை அமேசான் பிரைம் வெளியிட்டுள்ளது. இந்தி மொழியை தவிர்த்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கேம் சேஞ்சர் வெளியாகிறது. பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரமே ஓடிடியில் கேம் சேஞ்சர் படம் வெளியாகிறது.
லைரானா பாடல்: மேலும், தியேட்டரில் முதல் நாளில் வெளியாகாத லைரானா பாடல் சமீபத்தில் முழு வீடியோவாக யூடியூப் சேனலில் வெளியானது. அந்த பாடலை பார்த்த ரசிகர்கள் விஷுவல்ஸ் எல்லாம் நல்லா இருக்கிறது என பாராட்டி வருகின்றனர். ஓடிடி தளத்தில் அந்த பாடலுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications