Game Changer OTT: புதுமையே இல்லாத கேம் சேஞ்சர்.. எந்த ஓடிடி தளத்தில் வெளியாகுதுனு தெரியுமா?

சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடித்துள்ள படம், 'கேம் சேஞ்சர்'. இதில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். பான் இந்திய திரைப்படமாக இப்படம் இம்மாதம் 10ந் தேதி வெளியான நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் எடுக்கப்பட்ட ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் இருவரும் நண்பர்களாக நடித்திருந்தனர். உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த இப்படத்தில் நடித்ததன் மூலம் உலகம் தெரிந்த நடிகராக மாறினார் ராம் சரண். இதையடுத்து, ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வந்தார். மேலும், இப்படத்தின் கதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் கதை ஆகும்.

shankar game changer ott

ஒரே நேரத்தில் இரண்டு படம்: கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு பணி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கிய போது, படப்பிடிப்பில் நடந்த விபத்து, லைகா உடனான பிரச்சனையால் படப்பிடிப்பு தாமதமானதைத் தொடர்ந்து, ராம்சரண் படத்தை இயக்க தொடங்கினார். இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போதே, இந்தியன் 2 பிரச்சனை தீர்ந்ததால் இந்தியன் 2 படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. இதனால்,ஷங்கர் ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் கேம்சேஞ்சர் படத்தை இயக்கினார்.

நெகட்டிவ் விமர்சனம்: இதனால்,கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின் ஆண்டு ஜனவரி மாதம் 10ந் தேதி வெளியானது.மிகப்பெரிய பொருட் செலவில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு மக்களிடம் இருந்து வந்த நெகட்டிவ் விமர்சனங்களால் தோல்வி படமாக மாறியது. இப்படத்தின் கதை முதல்வன் திரைப்படத்தின் கதை போல இருப்பதாகவும் கார்த்திக் சுப்புராஜ், ஷங்கரின் கடையே உல்டா புல்டா செய்து வெளியிட்டு விட்டார் என்றும் இணையத்தில் பலவிதமான கருத்துக்கள் பரவி வருகின்றன.

பெரும் நஷ்டத்தில் தில் ராஜ்: அதேபோல ஷங்கரின் இந்தியன் 2 படம் தோல்வியடைந்த நிலையில் அடுத்து அவர் இயக்கிய கேம் சேஞ்சர் படமும் தோல்வியடைந்து இருப்பதால், சங்கர் இன்றைய ட்ரெண்டுக்கு மாற வேண்டும் என சினிமா பிரியர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு இந்த படத்தின் தோல்வியால் பெரும் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஓடிடி ரிலீஸ் தேதி: இந்நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த உத்தேச தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை அமேசான் பிரைம் ஒடிடி தளம் உரிமையை பெற்றுள்ளதால், இப்படம் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என நம்பப்படுகிறது. அதன்படி பிப்ரவரி 14ந் தேதி அல்லது 15ந் தேதி கேம் சேஞ்சர் படத்தை வெளியிட அமேசான் பிரைம் வீடியோ திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டரிலேயே வியாபாரம் ஆகாத , கேம் சேஞ்சர் படத்திற்கு ஓடிடியில் வரவேற்பு கிடைக்காது என்று சொல்லப்படுகிறது.

shankar game changer ott

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X