Ghost OTT - சிவராஜ்குமாரின் கோஸ்ட் ஓடிடி ரிலீஸ் எப்போது?.. ஆஹா தேதியை சொல்லிட்டாங்களே..!

பெங்களூரு: Ghost OTT (கோஸ்ட் ஓடிடி) கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்திருக்கும் கோஸ்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கர்நாடகத்தின் மிகப்பெரிய ஹீரோவான ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ்குமார். 1974ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீநிவாச கல்யாணா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 1986ஆம் ஆண்டு வெளியான ஆனந்த் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.முதல் படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன.

Shivarajkumars Ghost Movie releasing on 22nd on Aha OTT platform

முன்னணி ஹீரோ: ராஜ்குமாரின் மகன் என்ற அடையாளத்தோடு ஆரம்பத்தில் சிவராஜ்குமார் அறியப்பட்டாலும் காலம் செல்ல செல்ல தனது திறமையால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். தொடர்ந்து அவர் நடித்த படங்களும் அதிரிபுதிரி ஹிட்டடிக்க கன்னட சக்கரவர்த்தி என்ற அந்தஸ்தையும் பெற்றார். இவரது தம்பிதான் மறைந்த ஹீரோ புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் என்ட்ரி: கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்த சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி ஆனார். படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் அவரது காட்சிகளுக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஜெயிலர் மட்டுமின்றி தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருக்கிறார்.

கோஸ்ட்: இதற்கிடையே அவர் நடித்திருந்த கோஸ்ட் படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸானது. லியோ படத்துக்கு போட்டியாக களமிறங்கிய அந்தப் படத்தை எம்.ஜி.சீனிவாஸ் இயக்கியிருந்தார். சிவராஜ்குமாருடன் ஜெயராம், அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் 30 கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

ஆஹா: இந்த சூழலில் அந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி கோஸ்ட் படமானது டிசம்பர் 22ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸாகவிருக்கிறது. அதனையொட்டி கோஸ்ட் படத்தின் ட்ரெய்லரும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸ் போலவே ஓடிடியிலும் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று படக்குழு எதிர்பார்த்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X