ஜெமினி டிவியில் இன்று மாலை ஒளிபரப்பாகும் ஷியாம் சிங்கா ராய் படம்... ரசிகர்கள் உற்சாகம்!
ஐதராபாத் : சுதந்திரத்திற்கு பிறகும் இந்தியாவில் பெண்களை கோயில்களுக்கு நேர்ந்துவிடும் தேவதாசி முறை வழக்கத்தில்தான் இருந்தது. இந்த நடைமுறையை கேள்விக்குட்படுத்தி சமீபத்தில் நானி, சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் ஷியாம் சிங்கா ராய். இந்தப் படம் இன்றைய தினம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கு.

ஷியாம் சிங்கா ராய் படம்
நானி, சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான படம் ஷியாம் சிங்கா ராய். மறுஜென்மத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படம் பல சிறப்பான அம்சங்களை கொண்டு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தேவதாசி முறையையும் மையமாக கொண்டிருந்தது இந்தப் படம்.

தேவதாசி முறை
இந்தியாவில் கடந்த 1975 வரையில் பெண்களை கோயில்களுக்கு நேர்ந்துவிடும் தேவதாசி முறை வழக்கத்தில் இருந்தது. இந்த வழக்கத்தை கேள்விக்குள்ளாக்கிய ஷியாம் சிங்கா ராயின் வாழ்க்கையை மையமாக கொண்டு சமீபத்தில் வெளியானது ஷியாம் சிங்கா ராய். வரலாற்று பின்புலத்துடன் வெளியானது இந்தப் படம்.

ஆணவப் படுகொலை
தேவதாசிப் பெண்ணை மணம் செய்த ஒரே காரணத்திற்காக ஆணவப் படுகொலை செய்யப்பட்டார் ஷியாம் சிங்கா ராய். பெண் விடுதலைக் குறித்தும் இந்தப் படம் பேசியது. சிறப்பான திரைக்கதை, சிறப்பான ஒளிப்பதிவு, பாடல்கள் என அனைத்து அம்சங்களிலும் சிறப்பாக வெளியானது ஷியாம் சிங்கா ராய்.

ஜெமினி டிவியில் ரிலீஸ்
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜெமினி தொலைக்காட்சியில் இந்தப் படம் ஒளிபரப்பாக உள்ளது. இதுகுறித்து படத்தின் நாயகன் நானி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் போஸ்டருடன் அறிவித்துள்ளார். இன்றைய தினம் ஷியாம் சிங்கா ராய் அனைவருடைய வீட்டிற்கும் வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நானி, சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். ரசிகர்கள் இந்தப் படத்தின் சிறப்பான காட்சி அமைப்புளை மிகவும் ரசித்தனர். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக உருவாக்கியிருந்தார் இயக்குநர். முக்கியமாக பிளாஷ்பேக் காட்சிகளை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


Click it and Unblock the Notifications











