Pathu Thala OTT : சிம்புக்கே இந்த நிலைமையா.. 4 வாரத்தில் ஓடிடிக்கு வந்த பத்து தல !
சென்னை : சிலம்பரசன் முக்கிய வேடத்தில் நடித்த பத்து தல திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கெளதம் மேனன் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவான படம் பத்து தல.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடியாக இசையமைத்து மிரட்டி உள்ளார்.

சிம்புவின் பத்து தல : மாநாடு, வெந்து தணித்தது காடு போன்ற மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்த சிம்பு, அதிரடியாக மற்றொரு வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார். பத்து தல படத்தில் சிம்பு கேங்ஸ்டராக அதிரடி காட்டி, நடை, உடை , கெட்டப்பு என அனைத்திலும் கைத்தட்டலை அள்ளி உள்ளார். இடைவேளை வரை சிம்புவை காட்டாதுதான் சிம்பு ரசிகர்களின் பெரிய கவலையாக இருந்தது.
அதிரடியான கதை : பத்து தல கதை ஆரம்பிக்கும் போதே, தமிழ்நாடு முதலமைச்சரான சந்தோஷ் பிரதாப்பை கடத்தி விட்டு புதிய முதல்வர் ஒருவரை தேர்வு செய்கின்றனர். அந்த கடத்தலுக்கு பின்னணியில் மணல் மாஃபியா டானான ஏஜி ராவணன் உள்ளார் என்று சந்தேகிக்கும் சிபிஐ அதிகாரிகள், அவரை பிடிக்க குணா கதாபாத்திரத்தில் நடித்த கெளதம் கார்த்திக்கை அனுப்புகின்றனர்.
ஏஜிஆர் யார் : ஏஜிஆரை பிடிக்க வந்த கௌதம் கார்த்தி, சிம்புவின் நண்பனாகவே மாறிவிடுகிறான். சிம்பு மக்களுக்கு செய்த நல்ல விஷயத்தை பார்த்து வியந்து போகிறான். இறுதியில் ஏஜிஆரை பிடிக்க வந்த அந்த அண்டர்கவர் ஆபிஸர் என்ன ஆனார்? சிம்புவை அரஸ்ட் செய்தாரா? இல்லையா? என்பது தான் பத்து தல கிளைமேக்ஸ். கன்னடத்தில் வெளியாக முஃப்தி திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் ஒரு சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளார்.

ஓடிடி ரிலீஸ் : கடந்த மாதம் 30ந் தேதி வெளியான இத்திரைப்படத்தில் பிரியா பவானி சங்கரின் காதல், மோதல், ஆர்யா மனைவி சாயிஷாவின் ஐட்டம் டான்ஸ் என படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தன. இந்நிலையில் இத்திரைப்படம் ஏப்ரல் 27ந் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. அந்த அதிகாரப்பூர்வ தகவலை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











