Haraa OTT:பொட்டி வந்தாச்சு மக்களே! வெள்ளி விழா நாயகன் மோகனின் ஹரா படம் இரண்டு ஓடிடி தளங்களில் ரிலீஸ்
சென்னை: ஓ.டி.டி., தளங்கள் வந்த பின்னர் ஓ.டி.டி., தளங்களில் படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகின்றது. இதனால் வாரவாரம் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆவதைப்போல் ஓ.டி.டி., தளங்களிலும் ரிலீஸ் ஆகின்றது. அந்தவகையில் இந்த வாரம் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள வெள்ளி விழா நாயகன் மோகன் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ஹரா படம் இரண்டு ஓ.டி.டி., தளங்களில் ஸ்ட்ரீம் ஆகின்றது. அவை எந்தெந்த ஓ.டி.டி., தளங்கள்என்பது குறித்து பார்க்கலாம்.
சினிமா ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும், ஓ.டி.டி., தளங்களில் படம் வெளியான பின்னரும் ஒரு படத்தை திரும்பப் பார்த்து படம் தொடர்பாக விவாதம் நடத்தும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதுமட்டும் இல்லாமல் தியேட்டரில் படத்தை பார்க்க தவறவிட்ட ரசிகர்களின் வரபிரசாதமாகவே ஓ.டி.டி., தளங்கள் அமைந்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் ஓ.டி.டி., தளங்களில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிமாகிக் கொண்டே உள்ளது.

அதேபோல் ஓ.டி.டி., தளங்களில் நல்ல லாபம் கிடைப்பதால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் பிசினஸ் செய்யும் பெரிய நிறுவனங்கள் தொடங்கி சிறு நிறுவனங்கள் வரை என பல ஓ.டி.டி., தளங்கள் வந்துவிட்டது. இதனால் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படத்தின் ஓ.டி.டி., உரிமத்தை ஒரு நிறுவனத்திடம் தகுந்த விலைக்கு விற்பனை செய்யமுடியவில்லை என்றாலும் மற்றொரு ஓ.டி.டி., நிறுவனத்திடம் விறபனை செய்ய முடிகின்றது. இதுமட்டும் இல்லாமல் தியேட்டரில் ரிலீஸ் ஆனபோது சரியாக போகாத படங்கள் கூட ஓ.டி.டி., தளங்களில் வெளியானபோது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெள்ளி விழா நாயகன்: இப்படியான நிலையில் தமிழ் சினிமாவில் வெள்ளி விழா நாயகன் என பெயர் எடுத்த நடிகர் மோகன் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பின்னர் கம்பேக் கொடுத்த படம் ஹரா. தமிழ் சினிமாவில் 80களில் காதல் மன்னனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இவருக்கு கிடைத்த பெண்கள் ஆதரவினாலே இவர் வெள்ளி விழா நாயகனாக உருவானார். படங்களில் பேசும் வசனங்கள் மோகன் தன்னைப் பார்த்துதான் பேசுகின்றார் என நினைத்து மோகன் மோது காதல் வயப்பட்ட பெண்கள் அதிகம்.
மோகன் பெயர் காரணம்: இன்றைக்கு இருக்கக்கூடிய 90ஸ் கிட்ஸ்களில் மோகன் என பெயர் இருக்கும் நபர்களிடம் உங்களுக்கு இந்த பெயர் வைக்க காரணம் என்ன எனக் கேட்டால், அவர்களில் பாதிபேருக்கும் குறையாமல், "எனது அம்மாவுக்கு நடிகர் மோகனைப் பிடிக்கும், அதனால்தான் எனக்கு இந்த பெயர்" எனக் கூறுவார்கள்.

ஹரா: இப்படியான மோகன் ஒருகட்டத்தில் படங்களில் நடிப்பதில் இருந்து முழுவதுமாக விலகிக் கொண்டார். இவரது நடிப்பில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியான படம் ஹரா. அப்பா மகள் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட, குடும்பக்கதை சார்ந்த ஆக்ஷன் படம். காதல் மன்னனாக வலம் வந்த மோகன் கம்பேக்கில் ஆக்ஷன் படங்களில் நடித்து மிரட்டி விட்டிருந்தார். படம் தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஓ.டி.டி ரிலீஸ்: இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவான ஹரா படம் ஜூன் 7ஆம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில் படம் எப்போது ஓ.டி.டி.,யில் ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்தது. அதற்கு பதில் கிடைக்கும் விதமாக ஹரா படம் இன்று அதாவது ஜூலை 5ஆம் தேதி முதல் இரண்டு ஓ.டி.டி., தளங்களில் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றது. அமேசான் பிரைம் மற்றும் ஆஹா தமிழ் ஓ.டி.டி., தளங்களில் படம் ஸ்ட்ரீம் ஆகின்றது. படத்தினை இரண்டு ஓ.டி.டி., தளங்கள் வாங்கிக் கொண்டதால் படகுழு மகிழ்ச்சியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











