Haraa OTT: கம்பேக்கில் ஜாக்பாட் அடித்த வெள்ளிவிழா நாயகன் மோகன்.. இரண்டு ஓடிடி தளத்தில் ஹரா ரிலீஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஜொலித்த நடிகர்கள் பலர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி அல்லது படங்களில் நடிக்காமல் இருந்துள்ளனர். அவர்களில் வெள்ளி விழா நாயகனாக கொடிகட்டிப் பறந்த மோகனும் ஒருவர். பல ஆண்டுகளாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த நடிகர் மோகன் தற்போது ஹரா படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான ஹரா படம். இந்த படம் வரும் 5ஆம் தேதியில் இருந்து அதாவது நாளையில் இருந்து ஓடிடி தளத்தில் வெளியாகின்றது.

80களில் தமிழ் சினிமாவில் வசூல் ராஜாவாக , காதல் மன்னனாக, வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். மௌனராகம் படத்தில் ரேவதியிடம், " எனக்கு ஒன்னும் இல்லை. உனக்குதான் கம்பளிபூச்சி ஊறரமாதிரி இருக்கும்" என சொல்லிவிட்டு ரேவதியை நோக்கி மோகன் பார்க்கும் பார்வையிலேயே காதலில் விழுந்த தமிழ்நாட்டு பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர். மோகன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் என்றால் அதனை மோகனே பாடுவதைப்போல் நினைத்து கேட்ட பெண் ரசிகைகளும் பலர்.

Haraa OTT Release OTT Movie Aha Tamil Amazon Prime

காதல் மன்னனாக இருந்து வந்த மோகன் தனது கம்பேக்கில் ஆக்‌ஷன் படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தார். தாதா 87, பொல்லாத உலகில் பயங்கர கேம், பவுடர் படங்களை இயக்கிய இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவான 'ஹரா' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை அதாவது ஜூலை 5ஆம் தேதி வெளியாகவுள்ளது என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இந்த படம் கடந்த ஜூன் 7ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

தி கோட்: விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் விஜய்யுடன் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மோகனும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மோகனுக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என கூறப்படுகின்றது. இந்த படத்தில் விஜயகாந்த் நடித்துள்ளதைப்போல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்படுத்தியுள்ளனர். இந்த படம் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது.

Haraa OTT Release OTT Movie Aha Tamil Amazon Prime

இரண்டு ஓடிடி தளம்: இந்நிலையில் ஏற்கனவே அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஹரா படம் வெளியாகின்றது என்ற தகவல் ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆஹா தமிழ் ஓடிடி தளத்திலும் வெளியாகவுள்ளது. நாளை அமேசான் பிரைமிலும் ஆஹாவிலும் படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் படத்தை திரையரங்கில் தவறவிட்ட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்பேக்கில் கெத்து காட்டிய மோகன்: கிராமப்புற ரசிகர்களை தன்வசம் வைத்திருந்த நடிகர் ராமராஜனும் ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் சாமானியன் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த படம் கடந்த மே 23ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. அந்த படத்தின் கதை சிறப்பாக இருந்தும் படத்துக்கு சரியான புரமோஷனை தயாரிப்பாளர் தரப்பில் இருந்து செய்யாததால் தான் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை என ராமராஜன் தனது ஆதங்கத்தை ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அந்த படத்திற்கு பிறகு வெளியான மோகனின் 'ஹரா' திரைப்படம் சாமானியன் படத்துக்கு முன்பாகவே ஓடிடியில் விற்பனையாகி ரிலீஸுக்கு தயாராகி விட்டது. ரஜினிகாந்த் கேமியோவாக நடித்த லால் சலாம் திரைப்படமும் இன்னமும் ஓடிடியில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Haraa OTT Release OTT Movie Aha Tamil Amazon Prime

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X