Pathu Thala: ஏஜிஆர் சத்தம் கேக்குதா..? அமேசான் ஓடிடியில் மாஸ் காட்டும் சிம்புவின் பத்து தல

சென்னை: சிம்புவின் பத்து தல திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கிருஷ்ணா இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் தயாரித்திருந்தது.

முதல் நாளில் நல்ல ஓபனிங் கிடைத்த பத்து தல படத்துக்கு அடுத்தடுத்த நாட்களில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், தற்போது அமேசான் ப்ரைமில் வெளியான பத்து தல ஓடிடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

 Simbus Pathu Thala streaming now on Amazon Prime OTT

அமேசான் ப்ரைமில் பத்து தல:சிம்புவின் பத்து தல திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் சிம்புவுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்ததால், பத்து தல மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது. கிருஷ்ணா இயக்கிய பத்து தல கன்னடத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்த ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் சிம்பு நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தின் ரியல் ஹீரோ கெளதம் கார்த்திக் தான். அதேபோல், ஏஆர் ரஹ்மானின் இசையும் படம் மீது அதிக ஹைப் கொடுத்திருந்தது. சிம்புவுக்கு பல மாஸ் சீன்ஸ் இருந்தும் சொதப்பலான திரைக்கதையால் பத்து தல படம் சக்சஸ் ஆகவில்லை.

பத்து தல வெளியான அடுத்த நாளே, வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸானது. இதுவும் பத்து தல படத்தின் வசூலுக்கு மைனஸாக அமைந்தது. இருப்பினும் பத்து தல திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 65 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்நிலையில், பத்து தல திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. ஒரே மாதத்தில் அமேசானில் வெளியான பத்து தல படத்திற்கு, ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமேசான் ப்ரைமில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது பத்து தல. அதனால், காலை முதலே பத்து தல என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், சிம்பு ரசிகர்களும் பத்து தல திரைப்படம் அமேசான் வெளியானதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஏஜிஆர் சத்தம் கேக்குதா, ஏஜிஆர் தான் மாஸ் என ரைம்மிங்காக பல கமெண்ட்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

 Simbus Pathu Thala streaming now on Amazon Prime OTT

இந்நிலையில், அமேசானில் வெளியானது முதலே பத்து தல திரைப்படம் தான் இந்த வார ஓடிடியில் நம்பர் 1 இடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பத்து தல படக்குழுவினர் உட்பட சிம்பு ரசிகர்கள் இதனை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகளில் பத்து தல திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், சிம்பு மீதான கிரேஸ் கொஞ்சம் கூட குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பத்து தல ரிலீஸான முதல் நாளில், ரோகிணி தியேட்டரில் படம் பார்க்கச் சென்ற நரிக்குறவ இன பெண்களை உள்ளே அனுமதிக்காதது சர்ச்சையானது. இந்நிலையில், அமேசானில் வெளியான பத்து தல படத்திற்குப் போட்டியாக, நானியின் தசரா திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் நானியின் தசரா மாஸ் காட்டிய நிலையில், ஓடிடியில் சிம்புவின் பத்து தல அசத்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X