புலி பட இயக்குனரின் அடுத்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்!

சென்னை : ஆந்தாலஜி படங்களின் வருகை தமிழிலும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ளது கசடதபற என்ற ஆந்தாலஜி திரைப்படம்.

6 ஹீரோக்கள்,6 ஹீரோயின்கள்,6 இசையமைப்பாளர்கள் என வித்தியாசமான 6 கதைகளைக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷான், சாந்தனு பாக்யராஜ், வெங்கட்பிரபு, பிரியா பவானி சங்கர், ரெஜினா கஸன்ட்ரா ,விஜயலட்சுமி, பிரேம்ஜி என பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இப்பொழுது நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

நேரடியாக ஓடிடியில்

நேரடியாக ஓடிடியில்

கொரோனா பரவல் காரணமாக டிஜிட்டல் தளங்களின் பயன்பாடு மிக அதிக அளவில் இருப்பதால் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக முடியாமல் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகிறது இதில் முன்னணி நடிகர்களின் படங்களும் அடங்கும். வடிவேலுவின் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக கொண்டாடப்பட்ட இயக்குனர் சிம்புதேவன் ஃபேண்டஸி படங்களுக்கு பெயர் போனவர்.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தமிழ் படங்களிலும் கற்பனைகளில் மட்டுமே தோன்றக்கூடிய பலவற்றை திரைப்படங்களாக உருவாக்கி அதில் வெற்றியும் கண்டு வருகிறார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் என பல வித்தியாசமான படங்களை இயக்கிய சிம்புதேவன் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தை கடைசியாக இயக்கியிருந்தார்.

ஃபேன்டஸி கதை

ஃபேன்டஸி கதை

கமர்சியல் ஹிட்டுகளை கொடுத்துக்கொண்டிருந்த விஜய் சற்று வித்தியாசமாக இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மிகப் பிரமாண்டமாக புதுமையான ஃபேன்டஸி கதை களத்தில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. மாறாக படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் புலி படத்திற்கு பிறகு இம்சை அரசன் 23 ம் புலிகேசி பாகம் 2 இயக்க சிம்பு தேவன் முயற்சித்து வருகிறார்.

இரண்டாவது பாகம்

இரண்டாவது பாகம்

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி முதல் பாகத்தைப் போலவே இரண்டாவது பாகமும் டார்க் காமெடியை மையப்படுத்தி உருவாக இருந்தது. இந்த படத்தையும் இயக்குனர் சங்கர் தயாரிக்க இருந்தார் . நடிகர் வடிவேலு இந்த படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்க நினைத்தார் பின் என்ன ஆனதோ தெரியவில்லை தயாரிப்பு நிறுவனத்திற்கும் வடிவேலுவுக்கும் மீண்டும் சிறு பூசல் ஏற்பட்டு 23ஆம் புலிகேசி இரண்டாவது பாகம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கசடதபற

கசடதபற

இந்த நிலையில்தான் சிம்புதேவன் கசடதபற என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளார். 6 ஹீரோக்கள் 6 ஹீரோயின்கள் 6 இசையமைப்பாளர்கள் வித்தியாசமான 6 கதைகள் என சிம்புதேவன் இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷான், சாந்தனு பாக்யராஜ்,வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன்,பிரியா பவானி சங்கர், ரெஜினா கெஸன்ட்ரா,ஜனனி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் இதில் நடித்துள்ளனர் .

சோனி லைவ்

சோனி லைவ்

வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் மற்றும் டிரெட்ண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். திரையில் வெளியிட உருவாகி வந்த கசடதபற இப்பொழுது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி சோனி லைவ் நிறுவனம் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. இன்னும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை இந்த மாத அதுக்குள் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X