ரணகளத்திலும் குதூகலம்.. தனுஷ் & நயன்தாரா விவகாரத்தில் ஆதாயம் தேடிய ஓடிடி நிறுவனம்!

சென்னை: நடிகை நயன்தாரா -விக்னேஷ் சிவன் இருவரும் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் காதலித்து கடந்த 2022ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தை அடுத்த ஒரு பிரம்மாண்டமான ரெசார்ட்டில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

இதன் வீடியோவை netflix நிறுவனம் வெளியிட உள்ளதாகவும் இதற்காக 30 கோடிகளுக்கும் மேற்பட்ட பணம் கைமாறியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையில் வரும் 18ம் தேதி இந்த வீடியோ நயன்தாராவின் ஆவணப்படமாக நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது.

dhanush nayanthara yaaradi nee mohini movie

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா அடுத்தடுத்து பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார். ஏழு ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நடிகை நயன்தாரா கடந்த 2022ம் ஆண்டில் மகாபலிபுரத்தை அடுத்த ஒரு மிகப்பெரிய ரெசார்ட்டில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இவரது காஸ்டியூம் மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றது. இவர்களது திருமண வீடியோவை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கிய நிலையில் இந்த வீடியோவை netflix நிறுவனத்திற்கு நயன்தாரா 30 கோடிகளுக்கும் மேல் விற்பனை செய்ததாக கூறப்பட்டது.

நயன்தாரா ஆவணப்படம்: இரண்டரை ஆண்டுகள் கழிந்தும் இந்த வீடியோ ஓடிடியில் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் நாளை மறுதினம் இந்த வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதன் ட்ரெய்லர் மற்றும் ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்த வீடியோவில் தன்னுடைய காதல் குறித்தும் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது விக்னேஷ் சிவனை மாறுபட்ட பார்வையில் பார்த்தது குறித்தும் நடிகை நயன்தாரா இந்த ப்ரமோவில் பேசியிருந்தார்.

நயன்தாரா குற்றச்சாட்டு: அவரது இந்த பேச்சு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்த வீடியோவில் நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்றைய தினம் இந்த விவகாரத்தில் நடிகர் தனுஷ் குறித்து நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் 3 பக்க அறிக்கை மூலம் குற்றம் சாட்டியுள்ளார். விக்னேஷ் சிவனும் தன்னுடைய பங்கிற்கு தனுஷின் பேச்சு ஒன்றை பதிவிட்டு குற்றம் சாட்டியுள்ளார். தங்களது ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளை இணைக்க விரும்பியதாகவும் ஆனால் 3 நொடி காட்சிகளை இணைத்ததற்கு 10 கோடி கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் நயன்தாரா குற்றம் சாட்டியுள்ளார்.

யாரடி நீ மோகினி படம்: இவர்களது இந்த விவகாரம் மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. இது குறித்து தனுஷ் தரப்பு விளக்கம் தெரிவிக்காத நிலையில், நயன்தாராவிற்கு நடிகைகள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னதாக நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படம் தற்போது கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை சிம்ப்ளி சவுத் ஓடிடியில் பார்க்கலாம் என்று அதன் சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

dhanush nayanthara yaaradi nee mohini movie

ஆதாயம் தேடும் ஓடிடி நிறுவனம்: நயன்தாரா -தனுஷ் இடையில் இப்படி ஒரு முக்கியமான பிரச்சினை ஓடிக் கொண்டிருக்க அவர்கள் இருவரும் இணைந்து நடித்த யாரடி நீ மோகினி படத்தை பிரமோட் செய்யும் வகையில் சூழ்நிலையை தனக்கு சாதகமாக சிம்ப்ளி சவுத் பயன்படுத்துவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X