Parasakthi Uncensored Version-னு சொல்லி ஏமாத்திட்டாங்க.. அப்போ என்னதான் இருக்கு?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படத்தின் கதை கடந்த 1965ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படமான பராசக்தி படத்திற்கு கிட்டத்தட்ட 30 கட்கள் சென்சார் தரப்பில் அளிக்கப்பட்டது.
சென்சார் சொன்ன எல்லா மாற்றங்களையும் செய்து படத்தை வெளியிட்டது படக்குழு. இப்படி இருக்கையில் படத்தின் ஓடிடி ரிலீஸிலும் சென்சார் வெர்ஷன் தான் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய ஜீ 5 நிறுவனமானது படத்தின் அன்சென்சார்டு வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இதை ஆவலுடன் பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமும், கொஞ்சம் நிம்மதியும் ஏற்பட்டுள்ளது.
அதாவது பராசக்தி படத்தின் சென்சார் வெர்ஷனுக்கே ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டது. அதேபோல் தற்போது அன்சென்சார்டு வெர்ஷன் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால், படத்தின் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்தது. அன்சென்சார்டு வெர்ஷன் என்றால் என்ன, சென்சார் தரப்பில் கட் செய்யப்பட்ட அனைத்தும் படத்தில் இருக்கும் வெர்ஷன் தானே அன்சென்சார்டு வெர்ஷன் என்று எதிர்பார்ப்பில் படத்தை பார்த்தால், கிளைமாக்ஸில் வரும் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை தொடர்பான காட்சி முழுவதுமாக இடம் பெற்றுள்ளது. அதேபோல் வசனங்களில் ம்யூட் இல்லாமல் படம் ஸ்ட்ரீம் ஆகிறது.

மற்றபடி இந்த படத்தை அன்சென்சார்டு வெர்ஷன் என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை என்று ரசிகர்கள் கருத்து சொல்லத் தொடங்கிவிட்டனர். அதாவது படத்தில் தீ பரவட்டும் என்றுதான் முதலில் இருந்தது, அது நீதி பரவட்டும் என்று சென்சார் சொன்ன பிறகு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அன்சென்சார்டு வெர்சனிலும் நீதி பரவட்டும் என்றே உள்ளது. அதேபோல் சிவகார்த்திகேயன் அறிமுக காட்சியில் இந்தி அரக்கி என்று இருந்தது சென்சாரால் நீக்கப்பட்டது. அதேபோல் நீக்கப்பட்ட காட்சி தான் அன்சென்சார்டு வெர்ஷனிலும் உள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஆனால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் காட்சியான, அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்வதாக பொருள் என்ற காட்சி இடம் பெற்றது மட்டும் ரசிகர்களுக்கும் திமுகவினருக்கும் கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்துள்ளது. படம் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மாற்று மொழியினருக்கு ஏற்ற வகையில் படத்தின் டப்பிங்கை சிறப்பாக கையாண்டுள்ளனர்.



Click it and Unblock the Notifications











