Ayalaan OTT: அயலான் ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அயலான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத், யோகி பாபு, கருணாகரன் பானுப்பிரியா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் மற்ற படங்களைப் போலவே, இந்த படமும் குடும்பங்கள் கொண்டாடப்படும் படமாகவும், குழந்தைகளைக் கவரும் படமாகவும் அமைந்துள்ளது. இப்படம் கடந்த பத்து நாட்களில் மட்டும் உலகளவில் ரூ.78 கோடிக்கு அதிகமாக வசூலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Sivakarthikeyan’s Ayalaan OTT Release date

தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய இரண்டு படங்களுமே, இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படங்களாகும். இந்த இரண்டு திரைப்படங்களும் அவற்றின் வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதைக்களத்தால் ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறது. ஒரு தரப்பினர் இந்த இரு படங்களுக்குமே பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் நெகடிவ் விமர்சனத்தை கொடுத்தனர்.

அயலான் CG காட்சிகள் சூப்பர்: 5 ஆண்டுகளாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த இந்த படத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட CG காட்சிகள் உருவாக்கி இந்திய அளவில் ஒரு படத்தில் அதிக CG காட்சிகள் இடம்பெற்ற திரைப்படமாகவும் அயலான் திகழ்கிறது. வேற்று கிரகத்தில் இருந்து வரும் ஏலியான் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து கொண்டு, பூமியை பெரிய அழிவிவ் இருந்து காப்பாற்றுவதுதான் படத்தின் கதை இப்படத்தை குழந்தைகள் ரசித்து பார்த்து வருகின்றனர். இதில் ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார்.

ஓடிடி ரிலீஸ் தேதி: இந்நிலையில், அயலான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை சன் நெக்ஸ்ட் ஓடிடி நிறுவனம் வாங்கி உள்ளது. இப்படம் வரும் பிப்ரவரி 9 முதல் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரே நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X