உலகளவில் அப்படியொரு சாதனையை படைத்த டாக்டர்.. வேற லெவல் சந்தோஷத்தில் ட்வீட் போட்ட சிவகார்த்திகேயன்!
சென்னை: நெட்பிளிக்ஸின் குளோபல் டாப் 10 பட்டியலில் டாக்டர் திரைப்படம் இடம்பெற்றுள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் செம சந்தோஷத்தில் ட்வீட் போட்டுள்ளார்.
மெரினா படம் மூலம் சாதாரண ஹீரோவாக அறிமுகமான நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படம் மூலமாக 100 கோடி நாயகனாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.
தியேட்டர்களில் கலெக்ஷனை அள்ளி விட்டு நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான டாக்டர் திரைப்படம் ஏகப்பட்ட சாதனைகளை படைத்துள்ளதாக சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

நெல்சனின் ட்ரீட்மென்ட்
டார்க் காமெடி திரைப்படங்களை ரசிகர்களுக்கு புரியும் படி கன கச்சிதமாக இயக்கி வருகிறார் இயக்குநர் நெல்சன். நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலேயே தனது திறமையை நிரூபித்த அவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் மேலும், ஒரு படி எடுத்து வைத்து செம ட்ரீட்மென்ட் கொடுத்துள்ளார்.

சிரிப்பு டாக்டர்
சிவகார்த்திகேயனுக்கே சொந்தமான காமிக்கல் எக்ஸ்பிரஷன் எதையும் முகத்தில் எந்தவொரு இடத்திலும் வெளிப்படுத்த விடாமல் நடிக்க வைத்து பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்து மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி உள்ளார் இந்த சிரிப்பு டாக்டர்.

நூறு கோடி நாயகன்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையில் உருவான டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக பல வாரங்களாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக சிரிப்பலையில் நிறைந்தது. இதன் மூலம் அந்த படத்தை வாங்கிய தியேட்டர் ஓனர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்குமே நல்ல லாபம் கிடைத்தது. நூறு கோடி நாயகனாகவும் சிவகார்த்திகேயன் ஆளே மாறிவிட்டார்.

நெட்பிளிக்ஸ் ரிலீஸ்
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே டாக்டர் திரைப்படம் சன் டிவி, சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸில் வெளியானது. உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்டுள்ள நம்பர் ஒன் ஒடிடி தளமான நெட்பிளிக்ஸில் டாக்டர் வெளியான நிலையில் தற்போது ஏகப்பட்ட சாதனைகளை படைத்துள்ளது அந்த படம்.

உலகளவில் சாதனை
டாக்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் குளோபல் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அறிவித்துள்ளார். மேலும், தமிழ் படங்களிலேயே இதுதான் முதல் இடத்தை பிடித்துள்ளது என்றும் இந்திய படங்களில் 3வது இடத்தை டாக்டர் திரைப்படம் பிடித்துள்ளதாகவும் பெருமிதத்துடன் சிவகார்த்திகேயன் ட்வீட் போட்டுள்ளார்.

சறுக்கிய தனுஷ்
டாக்டர் திரைப்படத்திற்கு முன்னதாக இந்த ஆண்டு தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் நடித்த நவரசா உள்ளிட்ட படைப்புகள் நெட்பிளிக்ஸ் வெளியாகி இருந்த நிலையில், சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தை அதிகப்படியான ரசிகர்கள் பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











