பராசக்தி அன் கட் வெர்ஷன் பார்க்க ரெடியா?.. ஆஹா இது லிஸ்ட்லையே இல்லையே.. பட்டாசா இருக்கப்போகுது

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான பராசக்தி திரைப்படம் கடந்த மாதம் பொங்கலுக்கு வெளியானது. பெரிய சம்பவத்தை படம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சுமாரான வரவேற்பையே படம் பெற்றது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பிருந்து ஜீ 5 ஓடிடி தளத்தில் பராசக்தி ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனை வைத்து சுதா கொங்கரா இயக்கிய படம் பராசக்தி. இதில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். 60களில் தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையப்படுத்தி இயக்குநர் இந்தப் படத்தை எடுத்திருந்தார். எனவே நிச்சயம் பெரிய அதிர்வலைகளை இப்படம் ஏற்படுத்தும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

சென்சார் போட்ட முட்டுக்கட்டை: ஆனால் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஏகப்பட்ட கட்டுகளையும், மியூட்டுகளையும் சொன்னார்கள். படக்குழு எவ்வளவு போராடினாலும் அவர்கள் இறங்கி வராததால்; சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் சொன்ன கட்டுப்பாடுகளுடன் படத்தை ரிலீஸ் செய்தார்கள். இருந்தாலும் ரசிகர்கள் பெரிய ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்தார்கள்.

Sivakarthikeyan s Parasakthi to Stream in Uncut Version on ZEE5 Report
Photo Credit:

சுமார்தான்: ஆனால் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இன்னும் காத்திரமாக சொல்லியிருக்க வேண்டிய கதையை இயக்குநர் எலைட் தன்மையோடு சொல்லிவிட்டார் என்று விமர்சனத்தை முன்வைத்தார்கள். விமர்சனத்தில் படம் பின் தங்கினாலும் வசூலில் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அறிவித்தது. மேலும் இயக்குநரையும், சிவகார்த்திகேயனையும் தயாரிப்பாளர் பாராட்டவும் செய்தார்.

ஓடிடியில் பராசக்தி: சூழல் இப்படி இருக்க பராசக்தி திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு ஜீ 5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக ஆரம்பித்தது. தியேட்டர்களில் கிடைத்தது மாதிரியான குறைவான ரெஸ்பான்ஸ்தான் கிடைக்குமோ என்று படக்குழு அச்சப்பட்ட சூழலில்; அவர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக மொத்தம் ஒரு கோடி நிமிடங்கள் ஸ்ட்ரீமாகி சாதனையை படைத்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அன் கட் வெர்ஷன்: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது பராசக்தி படத்தின் அன் கட் வெர்ஷனை இன்னும் சில நாட்களில் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெளிநாடுகளில் சென்சார் செய்யப்படாத வெர்ஷன் வெளியான சூழலில்; ஓடிடியிலும் அது வெளியிடப்பட்டால் இன்னமும் சென்சேஷன் ஆகும் என்பது எஸ்கே ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X