சிவகார்த்திகேயன் படத்துக்கு வந்த சோதனையா இது… ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகிறதா பிரின்ஸ்…?

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான பிரின்ஸ் படத்துக்கு போட்டியாக கார்த்தியின் சர்தாரும் ரிலீஸானது.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்க்கு முதல் நாளில் மட்டுமே நல்ல ஓப்பனிங் கிடைத்த நிலையில், படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

ஏமாற்றிய சிவகார்த்திகேயன்

ஏமாற்றிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக அக் 21ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான இந்தப் படத்தை அனுதீப் இயக்கியிருந்தார். ஜதி ரத்னலு படம் மூலம் கவனம் ஈர்த்திருந்த அனுதீப், பிரின்ஸில் வழக்கமான காமெடியை மட்டும் கதையாக மாற்றி ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். டாக்டர், டான் என சூப்பராக கம்பேக் கொடுத்த சிவகார்த்திகேயன், பிரின்ஸ் படத்தில் கொஞ்சம் சறுக்கிவிட்டார் என்றே கோல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கலெக்‌ஷனிலும் படுமோசம்

கலெக்‌ஷனிலும் படுமோசம்

பிரின்ஸ் படத்துக்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்ததால், 7 முதல் 8 கோடி வரை வசூலித்தது. ஆனால், நெகட்டிவான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் கலெக்‌ஷன் சுத்தமாக அடி வாங்கியது. இதுவரை மொத்தமே 50 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிரின்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய சர்தார், பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இதனால், தீபாவளி விடுமுறை தினங்களுக்குப் பிறகு பிரின்ஸ் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்துவிட்டது.

ஓடிடி ரிலீஸ் தேதி

ஓடிடி ரிலீஸ் தேதி

பிரின்ஸ் படத்துக்கு கிடைத்த நெகட்டிவான விமர்சனங்கள் தியேட்டர் ஆடியன்ஸை குறைத்துவிட்டது. இதனால், உடனடியாக படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் வரும் 25ம் தேதி (நவ 25) ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. படம் வெளியாகி ஒரே மாதத்திற்கு பிரின்ஸ் ஓடிடியில் வெளியாகவிருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து விரைவில் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதேநேரம் பிரின்ஸுடன் ரிலீஸான சர்தார், இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளருக்கு லாபம் தான்

தயாரிப்பாளருக்கு லாபம் தான்

பிரின்ஸ் படத்திற்கு திரையரங்குகளில் வசூல் கிடைக்காவிட்டாலும், தயாரிப்பாளருக்கு லாபம் என்றே சொல்லப்படுகிறது. 60 கோடி பட்ஜெட்டில் தயாரான பிரின்ஸ், ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட வகைகளில் 50 கோடிக்கும் மேல் பிசினஸ் செய்துவிட்டதாம். டேபிள் பிராஃபிட் வகையில் சிவகார்த்திகேயன் தப்பி பிழைத்துள்ளார். அதேநேரம், சிவகார்த்திகேயன் ஒரே மாதிரியான கதைகளை தேர்ந்தெடுப்பதாகவும், அவரது நடிப்பில் வித்தியாசம் இல்லையென்றும் ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில், தற்போது பிரின்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X