இந்த வாரம் ஓடிடி ரிலீஸுக்கு காத்திருக்கும் படங்கள்… சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்

சென்னை: இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

திரையரங்குகளைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் முக்கியமான நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன.

அந்த வரிசையில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்தும், அதில் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை பெற்றது எது எனவும் இப்போது பார்க்கலாம்.

அமேசான் ப்ரைமில் காந்தாரா

அமேசான் ப்ரைமில் காந்தாரா

செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியான கன்னட திரைப்படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை ஹோம்பலே நிறுவனம் தயாரித்திருந்தது. மொத்தமே 16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், இதுவரை திரையரங்குகளில் மட்டுமே 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கெத்து காட்டியுள்ளது. இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் காந்தாரா, இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தியேட்டர் ஆடியன்ஸை போலவே ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது காந்தாரா. முதல் நாளிலேயே நல்ல ரீச் கிடைத்துள்ளதால், வரும் நாட்களில் காந்தாரா பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்

இந்த வாரம் கோலிவுட் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் மட்டுமே வெளியாகிறது. தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் 21ம் தேதி வெளியான பிரின்ஸ், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. நெகட்டிவான விமர்சனங்களால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனிலும் தடுமாறிய இந்தப் படம், ஓடிடி ரிலீஸுக்கு தான் செட்டாகும் என ரசிகர்கள் கூறியிருந்தனர். அதனால், நாளை (நவ 25) ஹாட்ஸ்டாரில் வெளியாகும் பிரின்ஸ், சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு வீக் எண்ட் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

படவெட்டு, சுப்

படவெட்டு, சுப்

மலையாள சினிமா ரசிகர்களுக்கு நிவின் பாலியின் படவெட்டு திரைப்படம், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நாளை (நவ 25) முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. பொலிட்டிக்கல் ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை லிஜு கிருஷ்ணா இயக்கியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. அதனால், ஓடிடி ரசிகர்களிடமும் படவெட்டு திரைப்படம் ரீச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மான் இந்தியில் நடித்த 'சுப்' திரைப்படமும் ஓடிடியில் நாளை வெளியாகிறது. பால்கி இயக்கியுள்ள இந்தப் படம் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. சுப் திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்தப் படம், நாளை ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.

தெலுங்கு, இந்தி ரசிகர்களுக்கு

தெலுங்கு, இந்தி ரசிகர்களுக்கு

தெலுங்கில் 'மீட் க்யூட்' திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. சத்யராஜ், ரோகிணி, வர்ஷா பொல்லாமா உள்ளிட்ட பலர் நடித்துள்ள மீட் க்யூட் ஆந்தாலஜி ஜானரில் உருவாகியுள்ளது. மீட் க்யூட் திரைப்படம் நாளை (நவ 25) சோனி லிவ் ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல், இந்தியில் காக்கி தி பீகார் சாப்டர் (Khakee The Bihar Chapter) என்ற வெப் சீரிஸ் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. 2004ம் ஆண்டு பீஹாரில் அமித் லோதா என்ற ஐபிஎஸ் ஆபிஸருக்கும், சந்தன் என்ற லோக்கல் மாபியாவுக்கும் இடையே நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த வெப் சீரிஸுக்கு ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஹாலிவுட் ரசிகர்களுக்கு

ஹாலிவுட் ரசிகர்களுக்கு

ஹாலிவுட் ரசிகர்களுக்கு 'The Swimmers' என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் போட்டியில் சகோதரிகள் இருவர் பங்கேற்றனர். அவர்களின் பயணத்தை விவரிக்கும் விதமாக உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. அதேபோல், 'The Lost Patient' என்ற ஹாலிவுட் திரைப்படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நாளை வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X