Amaran OTT Release Date: பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை பறக்கவிட்ட அமரன்.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸான படம் அமரன். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக் கொண்டு உருவாக்காப்பட்டது. படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கினார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்தார். படத்தினை சோனி பிக்சர்ஸ் உடன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில் படம் தியேட்டரில் உலக அளவில் ரூபாய் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமரன் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்து, சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. படம் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டது. இந்தப் படத்திற்கு முன்னர், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தின் வெற்றி, அமரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை இருமடங்காக மாற்றியது.

sivakarthikeyan amaran ott

அமரன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் தீபாவாளிக்கு ரிலீஸ் ஆனது. படம் இந்திய ராணுவ மேஜரின் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தியது என்பதால், இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு படம் நன்றாகவே கனெக்ட் ஆனது. இதனால் படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் குவித்தது. மேலும் படத்தினை இந்திய ராணுவத் தளவாடத்திற்கே சென்று படப்பிடிப்புகளை நடத்தினர். படம் ரசிகர்களைக் கடந்து பொதுமக்களாலும் கொண்டாடப்பட்டது.

ஓவர்சீஸ் வசூல்: இதுமட்டும் இல்லாமல், பல அரசியல் தலைவர்கள் படத்தினைப் பாராட்டினர். குறிப்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படம் பார்ப்பதற்கு எமோஷ்னலாக இருப்பதாக படக்குழுவினரைப் பாராட்டினார். படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதும் வெளிநாடுகளிலும் பெரும் வசூலைக் குவித்தது. இந்தியாவில் ரூபாய் 200 கோடிகளுக்கு மேல் வசூலைக் குவித்த இந்தப் படம், வெளிநாடுகளில் ரூபாய் 110 கோடிகள் வரை வசூல் செய்தது. வெளிநாட்டு வசூலில் இந்தப் படத்தின் வசூல் என்பது கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வசூலை விடவும் அதிகம்.

sivakarthikeyan amaran

வசூல் மழை: மேலும் 300 கோடிகள் வசூல் குவித்த முதல் சிவகார்த்திகேயன் படமாகவும் மாறியது. மேலும், தமிழ் சினிமா உலகில் ரஜினி, கமல், விஜய்க்குப் பின்னர் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 300 கோடிகள் வசூல் செய்த நடிகர் என்ற நிலைக்கு உயர்ந்தார். மேலும் டயர் 2வில் இருந்த சிவகார்த்திகேயன், டயர் 1க்கு அசால்ட்டாக முன்னேறினார்.

sivakarthikeyan amaran

ஓடிடி ரிலீஸ் தேதி: படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் படத்தினை வாங்கிய ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், படத்தினை ஏற்கனவே குறிப்பிட்ட தேதியில் இருந்து சற்று தாமதமாக ரிலீஸ் செய்ய ஒப்புக் கொண்டது. இதனால் அமரன் படம் திரையரங்குகளில் மாபெரும் வசூலைக் குவிக்க உதவியது. இப்படியான நிலையில், படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதியை படக்குழு மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X