Amaran OTT: ஓடிடியில் வந்து இறங்கிய S.K வின் அமரன்.. தியேட்டரே அதிருச்சு.. இப்ப சொல்லவா வேணும்!

சென்னை: சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி அதாவது, இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் அமரன். இப்படத்தினை சோனி பிக்சர்ஸ் உடன் கமலஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இணைந்து தயாரித்தது. படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கினார். படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. வழக்கமாக தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி நான்கு வாரங்களில் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ஆனால், அமரன் படம் மட்டும் கிட்டத்தட்ட 8 வாரங்கள் தியேட்டரில் ஓடிய பின்னர் இன்று அதாவது டிசம்பர் 5ஆம் தேதி ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

ஏற்கனவே கூறியதைப் போல் இந்தப் படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால், இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன், தன்னை படத்திற்கென தயார் செய்துகொண்டார். குறிப்பாக, ஜிம்மிற்கு சென்று தனது உடலை தயார் செய்துகொண்டதும் சரி, மும்பையில் துப்பாக்கிகளை கையால சிறப்பு பயிற்சிக்கு சென்றதும் என படத்திற்காக சிவகார்த்திகேயன் பெரும் அர்பணிப்பைச் செலுத்தியுள்ளார்.

sivakarthikeyan sai pallavi amaran

படம் ரிலீஸ்க்கு முன்னர் இருந்தே படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இதுமட்டும் இல்லாமல், படம் வெளியான பின்னர் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினர். குறிப்பாக பொதுமக்கள் படத்தினை வெகு சிறப்பாக உள்ளதாக கூறி, தியேட்டருக்கு ரிப்பீட் மோடில் வந்தனர். படத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் பாராட்டினர்.

கண்ணீர்: படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு இந்திய ராணுவத் தளவாடங்களில் நடைபெற்றது. இதற்கென தனி அனுமதி பெற்று, படப்பிடிப்பு நடத்தினர். அதேபோல் படத்தினைப் பார்த்த இந்திய ராணுவ உயர் அதிகாரிகள், சிவகார்த்திகேயனை இந்திய ராணுவத்தில் வந்து இணைந்து கொள்ளும்படிக் கூறினர். அதேபோல் படம் பார்த்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலரும் அழுதுவிட்டனர்.

sivakarthikeyan sai pallavi amaran

வசூல்: படம் வசூல் ரீதியாக பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அதாவது, சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் அதிக வசூல் குவித்த படமாக இந்தப் படம் மாறியது. குறிப்பாக, கமல்ஹாசனின் நடிப்பில் அதிக வசூல் குவித்த படம் என்றால் அது விக்ரம். அந்தப் படத்தின் வெளிநாட்டு வசூலை அமரன் படத்தின் வெளிநாட்டு வசூல் முறியயடித்தது. அமரன் படம் வெளிநாட்டில் மட்டும் ரூபாய் 115 கோடிகள் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. மொத்தமாக உலகம் முழுவதும் ரூபாய் 320 கோடிகள் வரை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

sivakarthikeyan sai pallavi amaran

ஓடிடி ரிலீஸ்: தியேட்டரில் படத்திற்கு நல்ல வசூல் இருந்ததால், படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் படத்தினை ஏற்கனவே குறிப்பிட்டிருந்த தேதியில் இருந்து, மாற்று தேதியில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்தது. இதனால், படம் இன்று அதாவது, டிசம்பர் 5அம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தின் ஓடிடி ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X