Parasakthi OTT: தியேட்டரை விட ஓடிடி வருமானம் தெறிக்குதே.. பராசக்தி எந்த ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: சுதா கொங்கராவின் சூரரைப் போற்று நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையானது. கொரோனா காலத்தில் தியேட்டர்கள் திறக்கும் வரை காத்திருக்க வேண்டாம் என சூர்யா எடுத்த முடிவின் காரணமாக அந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.
இந்நிலையில், சுதா கொங்கராவின் அடுத்த படமான பராசக்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்தும் எந்தளவுக்கு அது விற்பனையாகி உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்கள் புதிய படங்களை வாங்க ரொம்பவே தயக்கம் காட்டி வரும் நிலையில், அந்த முன்னணி ஓடிடி நிறுவனம் தான் பராசக்தி படத்தையும் வாங்கியுள்ளதாக கூறுகின்றனர்.
ஜனநாயகனை வாங்கிய ஜீ5 தமிழ் தான்: விஜய்யின் ஜனநாயகன் படத்தை சுமார் 110 கோடி ரூபாய்க்கு வாங்கிய ஜீ5 நிறுவனம் தான் தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தையும் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாத நிலையில், பராசக்தி படத்தை தான் முதலில் ஓடிடியில் திரையிட ஜீ5 தமிழ் முடிவு செய்துள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட்கள் கசிந்துள்ளன.
எத்தனை கோடிக்கு வியாபாரம்: ஒரு கோடியப்பு நீ பார்த்த என வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி செய்து நடித்த சிவகார்த்திகேயன் தற்போது புரட்சி தளபதியாகவே மாறி நடித்துள்ள பராசக்தி படத்தின் ஓடிடி உரிமம் மட்டுமே சுமார் 52 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. தியேட்டர்களில் பராசக்தி படத்தின் வசூல் இந்த வாரம் எந்தளவுக்கு இருக்கும் என்பதை பொறுத்து தான் அந்த படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி நிர்ணயமாகும் என்கிற நிலையில், ஓடிடியில் மிகப்பெரிய வியாபாரத்தை பராசக்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பராசக்தி ஓடிடி ரிலீஸ்: சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, அதர்வா மற்றும் ரவி மோகன் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் வெளியான பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியான நிலையில், ஜீ5 தமிழ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 12 அல்லது 13ம் தேதிகளில் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. கூடிய விரைவில் ஜீ5 தமிழ் அதிகாரப்பூர்வ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











