நைட் முழுவதும் பார்ட்டி.. இரண்டு AKகளுடன் கொண்டாடிய நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதா துலிபாலா!

மும்பை: நடிகர் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்த நிலையில், பிரபல நடிகை சோபிதா துலிபாலாவுடன் பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் செய்து வந்தார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருவது லீக்கான நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பெரியவர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயத்துக்குப் பிறகு கவர்ச்சி உடைகளை அணிவதற்கு திடீர் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், பார்ட்டிகளுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்ததாகவும் பேச்சுக்கள் அடிபட்டன.

sobhita dhulipala anil kapoor naga chaitanya

ஆனால், எம்மி விருது விழாவில் நைட் மேனேஜர் வெப்சீரிஸ் நாமினேட் செய்யப்பட்டதை கொண்டாட நடைபெற்ற பிரம்மாண்ட இரவு பார்ட்டியில் நடிகை சோபிதா துலிபாலா கலந்துக் கொண்ட காட்சிகள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன.

AKகளுடன் சோபிதா நைட் பார்ட்டி: நைட் மேனேஜர் வெப்சீரிஸில் ஆதித்யா ராய் கபூர் மற்றும் அனில் கபூருடன் இணைந்து நடித்திருந்தார் சோபிதா துலிபாலா. சமீபத்தில் நடைபெற்ற எம்மி விருது விழாவில் நைட் மேனேஜர் விருது பெறவில்லை என்றாலும் நாமினேட் செய்யப்பட்டு இருந்தது. அந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நைட் பார்ட்டியில் நேற்று முன் தினம் சோபிதா துலிபாலா கலந்துக் கொண்டார்.

sobhita dhulipala anil kapoor naga chaitanya

இரண்டு ஹேண்ட்ஸம் ஆண்கள்: அனில் கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூருடன் நடிப்பது குறித்து பேசிய நடிகை சோபிதா துலிபாலா இரண்டு அழகான ஆண்களுடன் நடிப்பது ரொம்பவே ஹேப்பியான விஷயம் என பேசியிருந்தார். சீக்கிரமே நைட் மேனேஜர் வெப்சீரிஸின் அடுத்த சீசன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லனாக நடித்த அனில் கபூர்: எப்போதுமே என்னை காமெடி ரோலுக்குத்தான் அழைப்பார்கள். ஆனால், இந்த முறை என்னை வில்லனாக்கிட்டீங்களே என வெப்சீரிஸின் இயக்குநர்களான சந்தீப் மோடி மற்றும் பிரியங்கா கோஷிடம் அனில் கபூர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

sobhita dhulipala anil kapoor naga chaitanya

66 வயது நடிகருடன் லிப் லாக்: தி நைட் மேனேஜர் வெப்சீரிஸில் 66 வயது நடிகரான அனில் கபூருடன் ஏகப்பட்ட முத்தக் காட்சிகளில் சோபிதா துலிபாலா நடித்திருந்தார். 30 முறை லிப் லாக் காட்சிகளில் சோபிதா துலிபாலா நடித்திருந்தது ஏகப்பட்ட ட்ரோல்கள் உருவாக காரணமாக இருந்தது. தன்னுடன் இன்டிமேட்டான காட்சிகளில் நடிக்க அனில் கபூர் ரொம்பவே நெர்வஸ் ஆனார் என்றும் சோபிதா துலிபாலா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால், ட்ரோல்களை எல்லாம் கடந்து நைட் மேனேஜர் வெப்சீரிஸ் எம்மி விருது நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்ற நிலையில், நடைபெற்ற நைட் பார்ட்டியில் சோபிதா துலிபாலா பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X