பொன்னியின் செல்வன் நடிகைக்கு இது தேவையா? 66 வயது நடிகருடன் 30 முறை லிப் லாக்.. குவியும் ட்ரோல்கள்!

மும்பை: பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து அசத்திய நடிகை சோபிதா துலிபாலா 66 வயது நடிகருடன் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்ததை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் அவரை பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

ராமன் ராகவ் 2.0 எனும் பாலிவுட் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சோபிதா துலிபாலா.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் படம் ஒன்றிலும் இவர் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார்.

பொன்னியின் செல்வன் வானதி

பொன்னியின் செல்வன் வானதி

துல்கர் சல்மானின் க்ரூப் படத்தின் மூலம் பிரபலமான சோபிதா துலிபாலாவுக்கு மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ராட்சச மாமனே, சொல் என இரு பாடல்கள் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இவருக்கு கிடைத்திருந்தது. 2ம் பாகத்திலும் அருள்மொழி வர்மனை திருமணம் செய்துக் கொள்ளப் போவதும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாட்டான வெப்சீரிஸ்

ஹாட்டான வெப்சீரிஸ்

பான் இந்திய நடிகையாக வலம் வரும் சோபிதா துலிபாலா சமீபத்தில் தி நைட் மேனேஜர் எனும் வெப்சீரிஸில் செம ஹாட்டாக நடித்து அனைவரையும் திக்குமுக்காட செய்துள்ளார். சினிமாவில் சென்சார் இருப்பதால் அடக்கி வாசிக்கும் நடிகைகள், ஓடிடி என்றால் எல்லாவற்றுக்கும் தாராளம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், சோபிதா துலிபாலாவின் முத்தக் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

66 வயது நடிகருடன்

66 வயது நடிகருடன்

பாலிவுட்டின் மூத்த நடிகரான அனில் கபூர் இந்த வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதித்யா ராய் கபூர், சோபிதா துலிபாலா நடிப்பில் சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான இந்த வெப்சீரிஸில் 66 வயதான அனில் கபூருடன் படு நெருக்கமாக சோபிதா துலிபாலா நடிக்கும் காட்சிகள் நிறைய இடம்பெற்றுள்ளன.

30க்கும் மேற்பட்ட முத்தங்கள்

30க்கும் மேற்பட்ட முத்தங்கள்

அதிலும், கிட்டத்தட்ட 30 முறைக்கும் மேலாக அனில் கபூருக்கு லிப் லாக் அடித்து சோபிதா துலிபாலா நடித்ததை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே ஷாக் ஆகி உள்ளனர். மேலும், நெட்டிசன்கள் சோபிதா துலிபாலா வயதான நடிகருக்கு லிப் லாக் அடித்த காட்சியை பயங்கரமாக ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

ரொம்ப நெர்வஸ் ஆகிட்டேன்

ரொம்ப நெர்வஸ் ஆகிட்டேன்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அனில் கபூர், இதற்கு முன் இப்படியொரு நெருக்கமான காட்சிகளில் தான் நடித்ததே கிடையாது என்றும் இந்த வெப்சீரிஸில் சோபிதா துலிபாலாவுக்கு லிப் லாக் அடிக்கும் காட்சியில் நடிக்க ரொம்பவே நெர்வஸ் ஆகிட்டேன் என்று பேசியிருப்பது மேலும், ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

குவியும் ட்ரோல்கள்

குவியும் ட்ரோல்கள்

31 வயதான சோபிதா துலி பாலா நடிகை சோனம் கபூரின் அப்பாவான அனில் கபூருடன் இப்படி லிப் லாக் காட்சியில் இணைந்து நடித்ததை பார்த்த ரசிகர்கள் அவரை அதிக அளவில் ட்ரோல் செய்து வருகின்றனர். நாக சைதன்யாவுடன் டேட்டிங் செய்து வருவதாக ஒரு கிசுகிசு ஓடி வரும் நிலையில், நாக சைதன்யா பாவமில்லையா என்றும் கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு பங்கம் பண்ணி வருகின்றனர்.

ஹாலிவுட் படம்

ஹாலிவுட் படம்

பொன்னியின் செல்வன் 2 அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், ஹாலிவுட் படமனா மங்கி மேன் படத்திலும் சோபிதா துலிபாலா நடித்து முடித்துள்ளார். மேலும், இந்தியில் சித்தாரா படத்திலும் நடித்து முடித்துள்ள சோபிதா துலிபாலா வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X