OTT: மனித உடலை திண்ணலாமா?.. திங்கலைன்னா நீயே உயிரோட இருக்க மாட்ட.. உயிரை உறைய வைக்கும் படம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இயக்குநர் ஜே.ஏ. பயோனா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ (Society of the Snow) திரைப்படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் நாமினேஷனில் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான போட்டியில் உள்ளது.

டைட்டானிக் படத்தை போல இந்த படத்திலும் ஒரு பெரிய விபத்து நிகழ்கிறது. பனிமலைகளுக்கு நடுவே சிக்கிக் கொள்ளும் பயணிகள் குளிரின் கோரம் காரணமாகவும் பசியின் கோரம் காரணமாகவும் ஒவ்வொரு நாளும் செத்து மடிகின்றனர். அதில் இருக்கும் சிலர் உயிர் பிழைத்து வாழ வேண்டும் என நினைக்கும் போது அவர்களுக்கு உள்ளே மனித உடலை திண்ணலாமா? என்கிற மனிதாபிமானத்துடன் நடைபெறும் உரையாடல் தான் அந்த படத்தின் உயிர்நாடியாக உள்ளது.

Society of the Snow Review in Tamil and OTT details

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ஓடிடியில் அதிக மக்களின் பார்வைகளை அள்ளியிருக்கிறது. அந்த படத்தின் விமர்சனம் மற்றும் எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ கதை: 1972ம் ஆண்டு உருகேயன் போர் விமானம் 571ல் ரக்பி விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் கோச் என 45 பேர் சாண்டியாகோவிற்கு செல்ல புறப்படுகின்றனர். ஆண்டஸ் எனும் பனி மலைகள் சூழ்ந்த இடத்தில் அந்த விமானம் கடுமையான வானிலையை போராடி சமாளித்து சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராமல் ஏற்படும் பனிப்புயல் காரணமாக விபத்தில் சிக்கி சின்னாபின்னமாக உடைகிறது. அதிலிருந்த 45 பேரில் 2 மாத போராட்டத்திற்கு பிறகு 16 பேர் உயிர் தப்பிக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்குநர் ஜே.ஏ. பயோனா இயக்கி இருக்கிறார். படத்தின் ஒரு காட்சிக் கூட போர் அடிக்காமல் உண்மையாகவே அந்த பனியில் நம்மையும் உறைய வைத்து விடும் அளவுக்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

உடல் தான் உணவு: விபத்தில் சிக்கிய விமானத்தை மீட்க வரும் விமானத்தை ஆரம்பத்திலேயே கையசைத்து சிக்னல் கொடுத்து, கூச்சலிட்டு அந்த 45 பேரும் பார்க்கின்றனர். ஆனால், அவர்களை அடையாளம் காணாமல் அந்த விமானம் சென்று விடுகிறது. அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக பசியின் கொடுமையாலும் பனியின் தாக்கம் காரணமாகவும் உயிரிழக்க தொடங்குகின்றனர். ஆரம்பத்தில் மனித உடல்களை திண்பது பாவம் இல்லையா என்கிற விவாதம் அங்கிருப்பவர்கள் இடையே வலுக்கிறது. அதன் பின்னர் ஷூவில் உள்ள லேஸ்களை எல்லாம் சாப்பிட ஆரம்பிக்கின்றனர். ஆனால், அடுத்தடுத்து நபர்கள் உயிரிழக்க இனிமேல் நமக்கு உணவே இறந்தவர்களின் உடல் தான் என சாப்பிட ஆரம்பிக்கின்றனர்.

Society of the Snow Review in Tamil and OTT details

முயற்சி செய்தால் சமயத்துல: அந்த இடத்தில் இருந்து விமானத்தின் மற்றொரு பாகம் சிதறிக் கிடந்த இடத்திற்கு கடும் பனியில் நடந்து சென்று பேட்டரி எடுத்து ரேடியோவை கனெக்ட் செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை. ரேடியோ மூலம் செய்தி கேட்டால், அனைவரும் இறந்து விட்டார்கள் என்றும் தேடுதல் பணி முடித்து வைக்கப்பட்டதாக வரும் செய்தி இவர்களை மேலும், சாகடிக்கிறது. அதன் பின்னர் பனிமலையை கடந்து அந்த நதியருகே சென்று விட்டால் போதும் என மூவர் கிளம்ப மற்றவர்கள் உடைந்த விமானத்திற்குள்ளே அடைக்கலமாக இருக்கின்றனர். அதிலும் ஒருவருக்கு உணவு குறைவாக இருக்கிறது 10 நாட்கள் நடக்க போதாது என்கிற நிலையில், ஒருவர் திரும்பி விடுகிறார். அந்த இருவர் மட்டும் கடைசியாக நடந்து நதிக்கரையை அடைந்து பல நாட்களுக்குப் பிறகு நீரை அருந்த அங்கே குதிரை மீது ஏறி வரும் ஒரு மனிதரின் உதவியால் இவர்கள் உயிரோடு இருக்கும் விஷயம் உலகத்துக்கு தெரிய வந்து இவர்களை காப்பாற்றுகின்றனர்.

எந்த ஓடிடி?: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தான் இந்த சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ காணக் கிடைக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் நாமினேட் ஆகியுள்ள சிறந்த சர்வதேச படங்களில் ஆஸ்கர் விருதை இந்த படமே தட்டித் தூக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கிளைமேக்ஸ் காட்சியில் நடக்கும் ட்விஸ்ட்டும் நிச்சயம் இந்த படத்தை மிஸ் செய்து விடாமல் பார்க்கத் தூண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X