சொட்ட சொட்ட காதல்.. ஹேப்பி எண்டிங்கிற்காக ரசிகர்களை ஏங்க வைத்த படங்கள்.. இந்த படங்களை மிஸ் செய்யாதீங்க! 

சென்னை: தமிழ் சினிமாவில் காதலை மட்டும் கதையம்சமாக கொண்ட பல படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. அவற்றில் வெகு சில படங்களே ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கான திரைக்கதையோடு இருக்கும். அப்படியான படங்களைப் பார்க்கும்போது கிளைமாக்ஸில் எப்படியாவது காதலர்கள் இணைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் ரசிகர்களுக்குள் ஏற்பட்டுவிடும். கடந்த ஆண்டு வெளியான லவ்வர் படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் பிரிந்துவிடுவார்கள். லவ்வர் படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது.

இன்றைய காலகட்டத்தில் வேண்டுமானால், கிளைமாக்ஸில் கதாநாயகனும் கதாநாயகியும் பிரிந்தால், பிரிவது சரிதான் என திரைக்கதை அமைக்கப்பட்டால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் முன்னர் அப்படி கிடையாது. இப்படி இருக்கும்போது கிளாமாக்ஸில் காதலர்கள் இணைந்துவிட வேண்டும் என ரசிகர்களுக்குள் எண்ணத்தை ஏற்படுத்திய படங்கள் குறித்து எக்ஸ் தளத்தில், ' Pixelated Pigeon' என்ற இணைய வாசி பட்டியலிட்டுள்ள படங்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அவரது பதிவில், " சினிமா எபோதுமே மக்களின் எமோஷனுடன் தொடர்புடவை. அதனால் தான் ஸ்கிரீனில் பார்ப்பவையோடு இயல்பாகவே மக்கள் அவங்களோட வாழ்க்கையோடு தொடர்பு படுத்திப்பாங்க. இதனாலாயே படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் கடைசியா ஒன்னு சேரனும்னு நினைப்பாங்க.

Some Tamil Cinema Love Movies Makes Impacts on Fans For Happy Ending OTT Deatils
Photo Credit:

மாதவன் - சிம்பு- தனுஷ்: மின்னலே - மாதவன், மற்றும் ரீமாசென் நடித்த இந்த படத்துல காதலுக்காக ஆள் மாறாட்டம் செய்யும் மாதவன், ரீமாவின் காதலை பெற்றாலும் கடைசி வரைக்கும் கொண்டு போயிருப்பார் கௌதம் வாசுதேவ் மேனன். யாரடி நீ மோகினி - தனுஷ் மற்றும் நயன்தாரா முதன் முதலா ஜோடி சேர்ந்த படம். படத்தின் ஆரம்ப முதலே தனுஷ் தன்னோட காதலுடன் இருந்தாலும் கடைசி வரைக்கும் இருவரும் சேருவாங்களா என்பது போல செல்வராகவன் அழகாக திரைக்கதை அமைத்திருப்பார். வல்லவன்- சிம்பு மற்றும் நயன்தாராவோட நடிப்புல வெளிவந்த இந்த படத்துல காதலுக்காக கடைசிவரை போறாடுவாரு சிம்பு. இந்த படத்துல அவரே திரைக்கதை எழுதி நடித்தார்.

ஜீவா - ரவி மோகன்: இதயத்திருடன்- கோ இன்சிடெண்ட் அப்படிங்கிற கான்செப்டை வைத்து இயக்குநர் சரண் எழுதி இயக்கிய ரவி மோகன் மற்றும் காம்னா நடித்த படம் தான் இதயத்திருடன். இந்த படத்துல மக்களுக்கு BP வர அளவுக்கு கதையை கடைசி வரைக்கும் கொண்டு போயிருப்பார். தித்திக்குதே - ஜீவா மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்த இந்த படம் ரொம்ப ரொமான்ஸான படமா அப்போதை ஆடியன்ஸ்கிட்ட ரெஸ்பான்ஸ் இருந்தது. அந்த அளவிற்கு ஜீவாவும் ஸ்ரீதேவியும் சேருவாங்களா என்பது போல கதை கொண்டு போயிருப்பார் இயக்குநர்.

ஓடிடி விபரம்: இயற்கை - கடல் சார்ந்த பகுதிகளை ரொம்ப அழகா, கதைக்கு தேவையான காட்சிகளுடன் காதலை சொல்லியிருப்பார் எஸ் பி ஜனநாதன், ஷாம் காதலியுடன் கடைசியில் சேர வேண்டும் என்பதாகவே மக்களின் விருப்பமாக இருக்கும். ஆனால் இயக்குநர் சோகத்தில் முடித்திருப்பார். ஏப்ரல் மாதத்தில் - கல்லூரி காதலை ரொம்ப அழகாக ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா காதல் காட்சிகளுடன் ரொம்ப அழகாக திரைக்கதை அமைத்திருப்பார் எஸ் எஸ் ஸ்டேன்லி. படத்தின் இறுதிவரை இருவரோட காதலை கொண்டு சென்று முடித்திருப்பார்" இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் இயற்கை, இதயத் திருடன், வல்லவன், தித்திக்குதே உள்ளிட்ட படங்கள் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் மின்னலே, ஏப்ரல் மாதத்தில் யூடியூப் தளத்திலும் உள்ளது.

More from Filmibeat

Read more about: ravi mohan ott madhavan simbu dhanush
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X