Sonakshi Sinha: பிரபல நடிகருடன் நைட் டின்னருக்கு போன லிங்கா பட நடிகை.. சோனாக்‌ஷி சின்ஹா சீக்ரெட்ஸ்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்‌ஷி சின்ஹா தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் லிங்கா படத்தில் நடித்துள்ளார்.

35 வயதான பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் உருவாகி உள்ள புதிய வெப்சீரிஸான தாஹத் (Dahaad) நேற்று இரவு பிரத்யேகமாக ஸ்க்ரீனிங் செய்யப்பட்டது.

Sonakshi Sinha went late night dinner with Popular Bollywood actor stirs marriage rumours

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நைட் டின்னருக்காக பிரபல நடிகருடன் சோனாக்‌ஷி சின்ஹா சென்றது தற்போது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

லிங்கா பட ஹீரோயின்: சல்மான் கானின் தபாங் படத்தில் ஹீரோயினாக 2010ல் பாலிவுட்டில் அறிமுகமானவர் வாரிசு நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. ரவுடி ராத்தோர், ஜோக்கர், சன் ஆஃப் சர்தார், தபாங் 2 என பல பெரிய படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

2014ம் ஆண்டு கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் அவரது நண்பரான சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்‌ஷி சின்ஹா ஹீரோயினாக நடித்த நிலையில், கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. ஜாக்கெட் அணியாமல் செம ஹாட்டாக அந்த படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் நடித்த சோனாக்‌ஷி அந்த படம் ஃபிளாப் ஆன நிலையில், கோலிவுட் பக்கமே தலை வைத்து படுக்கவில்லை.

Sonakshi Sinha went late night dinner with Popular Bollywood actor stirs marriage rumours

ஓடிடியில் அறிமுகம்: அனுஷ்காவை போல அதிக உடல் எடை இருப்பதால் பாலிவுட்டில் இருந்து கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்ட நடிகையாகவே சோனாக்‌ஷி சின்ஹா மாறிவிட்டார். கடந்த ஆண்டு இறுதியில் காலா, வலிமை படங்களில் நடித்த ஹூமா குரோஷியுடன் இணைந்து டபுள் எக்ஸ்எல் படத்தில் நடித்தார். ஆனால், அந்த படமும் ஓடவில்லை.

இந்நிலயில், தாஹத் எனும் ஓடிடியில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் சோனாக்‌ஷி சின்ஹா. அந்த படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடைபெற்றது. அமேசான் பிரைம் ஓடிடியில் தற்போது தாஹத் ஸ்ட்ரீமாகி வருகிறது.

Sonakshi Sinha went late night dinner with Popular Bollywood actor stirs marriage rumours

நடிகருடன் நைட் டின்னர்: கடந்த 2020ம் ஆண்டு முதலே பாலிவுட் நடிகர் ஜாகீர் இக்பால் உடன் காதல் கிசுக்கிசுக்களில் சிக்கி வருகிறார் சோனாக்‌ஷி சின்ஹா. அடிக்கடி அவருடன் பல இடங்களுக்கு டேட்டிங் செய்து வந்ததாக வட இந்திய மீடியாக்கள் தகவல் தெரிவித்துள்ளன.

டபுள் எக்ஸ்எல் படத்திலும் சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு ஜோடியாக ஜாகீர் இக்பால் தான் நடித்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற தாஹத் ப்ரீமியர் நிகழ்ச்சியை முடித்து விட்டு ரூமர் காதலருடன் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா இரவு டின்னருக்கு சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

கூடிய விரைவிலேயே இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போகின்றனரா என்று ஏகப்பட்ட கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X