காமத்துப்பால்ன்னா என்னன்னு தெரியாதா?.. சோனியா அகர்வாலின் ‘ஷ்’ திரைப்படம்.. ஓடிடியில் பெரிய சம்பவம்!
சென்னை: ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஷ்' படம் நாளை நேரடியாக ஆஹா ஓடிடியில் வெளியாகிறது. சார்லி நடித்த லைன்மேன் உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து ஆஹா ஓடிடியில் நேரடியாக வெளியாகி வருவதால் ரசிகர்கள் அந்த ஓடிடி பக்கம் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பிருத்வி ஆதித்யா, வள்ளி மோகன்தாஸ், ஹரீஷ், ஐபி கார்த்திகேயன் என 4 இயக்குநர்கள் இணைந்து 4 விதமான கதைகளை உருவாக்கி ஒரே படமாக 'ஷ்' எனும் டைட்டிலில் நாளை வெளியிடுகின்றனர். தமிழில் செக்ஸ் தொடர்பான படங்கள் அதிகளவில் வராத நிலையில், இந்த படம் முழுக்க முழுக்க அதை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது தற்போது வெளியான டீசரை பார்த்தாலே தெளிவாக தெரிந்து விடும்.

கண்டிப்பாக இந்த படம் வெளியானால் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடிக்கும் என டீசருக்கு கீழ் பலரும் கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்தி மற்றும் தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரீஸ் வந்ததை போல தமிழில் ஒரு லஸ்ட் ஸ்டோரிஸாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை ஓடிடியில் ரிலீஸ்: ஆஹா ஓடிடியில் 'ஷ்' திரைப்படம் நாளை நவம்பர் 29ம் தேதி வெளியாகிறது. பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா, சோனியா அகர்வால், இனியா இன்னமும் சில நடிகைகள் என ஏகப்பட்ட பிரபல நடிகைகளை வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஸ்ரீகாந்த், பிரேம்குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், பள்ளி மாணவர்களை வைத்து ஏகப்பட்ட காமத்துப் பால் கதைகளும் உம்மா கொடுத்தா குழந்தை பிறக்குமாம்மான்னு கேட்கும் வசனங்களையும் வைத்துள்ளனர்.
ஃபர்ஸ்ட் நைட் போய் பல்லாங்குழி ஆடப்போறியா?: அரை நிர்வாணமாக வெறும் துண்டுக் கட்டிக் கொண்டு பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியாக நடித்துள்ள காட்சிகளும், பாத்ரூம் கண்ணாடியை பார்த்துக் கொண்டு "ஃபர்ஸ்ட் நைட்ல போய் உன் புருஷன்கூட பல்லாங்குழி ஆடப்போறியா" என பேசும் வசனங்களும் தற்போது வெளியான டீசரில் இடம் பெற்று இளைஞர்களை பார்க்கத் தூண்டும் விதமாக டீசர் கட் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவே இந்த படத்தை ரிலீஸ் செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கட்டிப்புடித்து உருளும் சோனியா அகர்வால்: இனியா மற்றும் ஸ்ரீகாந்த் ஜோடி லிப் லாக் கிஸ் அடிக்கும் காட்சிகளும், சோனியா அகர்வால் மற்றும் பிரேம்குமார் கட்டிப்பிடித்துக் கொண்டு கட்டிலில் உருளும் காட்சிகளும் இந்த வெப்சீரிஸில் இடம்பெற்றுள்ளன. படம் முழுக்கவே உடலுறவை மட்டுமே பற்றி பேசும் விதமாக டீசர் கட் அமைந்துள்ள நிலையில், வெளியான பின்னர் பெரிய சம்பவம் காத்திருக்கு என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











