நரகாசூரன் படத்தை கடைசி நேரத்தில் கைவிட்ட பிரபல ஓடிடி நிறுவனம்.. சங்கடத்தில் கார்த்திக் நரேன்!
சென்னை: துருவங்கள் பதினாறு படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தை கவர்ந்தவர் இயக்குநர் கார்த்க் நரேன்.
அவரது ஒர்க்கை பார்த்து வியந்து போன கெளதம் மேனன், தனது தயாரிப்பில் ஒரு படம் பண்ணுங்க என ஆரம்பித்த இரண்டாவது படம் தான் நரகாசூரன்.
ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அந்த படம் இன்னமும் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு படம் தான் ஹிட்
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இதுவரை வெளியான 3 படங்களில் அவர் முதன்முதலாக இயக்கிய அந்த துருவங்கள் பதினாறு படம் மட்டுமே ஹிட் அடித்தது. லைகா தயாரிப்பில் அருண் விஜய், பிரசன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மாஃபியா மற்றும் தனுஷின் ஓடிடி ரிலீஸ் படமான மாறன் படங்கள் தோல்வியை சந்தித்தன.

நரக வேதனையில் நரகாசூரன்
துருவங்கள் பதினாறு படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா நடிப்பில் உருவான நரகாசூரன் திரைப்படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. ஊட்டி பேக்ரவுண்டில் அந்த படத்தை கிரைம் த்ரில்லராக உருவாக்கி இருந்தார் கார்த்திக் நரேன்.

கைவிரித்த ஓடிடி
தியேட்டர் ரிலீஸ் தான் சிக்கலாக உள்ளது. ஓடிடியிலாவது இந்த படத்தை தள்ளி விட்டு விடலாம் என இயக்குநர் கார்த்திக் நரேன் சோனி லைவ் ஓடிடிக்கு படத்தை கொடுத்தார். வரும் ஆகஸ்ட் 13ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் நரகாசூரன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அந்த ஒப்பந்தத்தை ஓடிடி நிறுவனம் ரத்து செய்துவிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ன சிக்கல்
பல ஃபைனான்ஸியர்களிடம் கடன் பெற்று இந்த படம் உருவாகி இருப்பதால், ஏகப்பட்ட சட்ட சிக்கல் இருப்பதை அறிந்து கொண்ட சோனி லைவ் நிறுவனம் படத்தை கடைசி நேரத்தில் வெளியிட மறுத்து விட்டதாக கூறுகின்றனர். இதனால் இயக்குநர் கார்த்திக் நரேன் தனது இரண்டாவது படம் ரிலீஸே ஆகாதா என்கிற அப்செட்டில் உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெட்பிளிக்ஸில் வெளியிட முயற்சி
சோனி லைவ் படத்தை கடைசி நேரத்தில் திருப்பி அளித்த நிலையில், அடுத்ததாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் படத்தை விற்க முயற்சி செய்து வருவதாகவும், அதற்குள் படத்தை சுற்றியுள்ள சிக்கல்களை தீர்க்கவும் இயக்குநர் போராடி வருவதாகவும் கூறுகின்றனர். எல்லாமே சுமூகமாக முடிந்து படம் வெளியானால் ரசிகர்கள் கார்த்திக் நரேனின் 2வது படத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











