Maaman OTT: தாய் மாமன்களே ரெடியா? சூரியின் மாமன் படம் நாளைக்கு ஓடிடியில் தரமா இறங்குது.. இதோ விபரம்!
சென்னை: விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கிய சூரி, அதன் பின்னர் நடித்தால் கதாநாயகன், இல்லை என்றால் கதையின் நாயகன் என்ற முடிவுக்குள் தீர்க்கமாக இருக்கிறார். நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக, கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கிய சூரிக்கு மக்கள் கொடுத்த வெற்றி அவருக்கு நல்ல தெம்பைக் கொடுத்துள்ளது. இப்படி இருக்கும்போது இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படமான மாமன் படம் ஓடிடி தளத்தில் நாளை முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. அது எந்த ஓடிடி தளம் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த பிளாக்பஸ்டர் 'மாமன்' திரைப்படம். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் படத்தின் வசூல் நகர்புறத்திற்கு இணையாக இருந்தது. வணிக ரீதியாக சூரிக்கு இது அடுத்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

மாமன் படத்தின் கதை சூரி எழுதிய கதை. இந்த கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குநர் பிரசாத் பாண்டியராஜ். படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்தார். அதேபோல் படத்தில் நடிகை ஸ்வாசிகா, ராஜ்கிரன் உள்ளிட்ட பலர் நடித்தார்கள். படம் குடும்ப உறவுகளுக்கு இடையிலான சிக்கல்களை பேசியது. மேலும் ரசிகர்களில் குறிப்பிட்ட அளவினர் இதெல்லாம் டூ மச் என்று எல்லாம் விமர்சித்தனர். மேலும் இதுக்கு சீரியல் எவ்வளவோ பரவாயில்லை என்று கூறினார்கள்.
ரசிகர்கள் வரவேற்பு: அதே நேரத்தில் பெருமாபாலான ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவும் மிகவும் எமோஷனலாக இருப்பதாகவும், படம் பார்க்க பார்க்க கண்ணீர் வருவதாகவும் கூறினார்கள். பல குழந்தைகள் தியேட்டரிலேயே அழுத வீடியோக்கள் இணையத்தில் படம் வெளியான கால கட்டத்தில் வேகமாக பரவியது. படம் கடந்த மே மாதம் 16ஆம் தேதி ரிலீஸ் ஆனது. தியேட்டரில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஓடிடி ரிலீஸ்: இப்படி இருக்கும்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் என்பது எப்போது என ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் படம் வெளியாகும் என்று பலரும் காத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் படம் நாளை அதாவது ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. படத்தின் ஓடிடி ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு நாளை சூரி மாமன் படம் செம விருந்தாக அமையவுள்ளது. என்ன தாய் மாமன்களே நீங்க ரெடியா!


Click it and Unblock the Notifications











