சூரியின் கொட்டுக்காளி.. எப்போ எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?.. லேட்டஸ்ட் தகவல்

சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர். காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடந்த மாதம் கொட்டுக்காளி திரைப்படம் வெளியானது. கூழாங்கல் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த பி.எஸ்.வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்தச் சூழலில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

சினிமாவில் கிடைத்த வேலைகளை இழுத்துப்போட்டு செய்தார் சூரி. சங்கமம் படத்தின் ஒரு பாடலில் புலி வேஷம் கட்டி மணிவண்ணனோடு ஆடும் சிறுவர்களுக்கு புலி போல் வேஷம் போட்டுவிட்டதுகூட சூரிதான். மேலும் அந்தப் பாடலில் சில நொடிகள் திரையிலும் தோன்றுவார் சூரி. இப்படி தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் தலை காட்டியுள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

soori kottukkaali ott

புரோட்டா சூரி: சினிமாவை நம்பி உண்மையாக உழைத்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என்பதுதான் விதி. அந்த சினிமா சூரியையும் கைவிடவில்லை. பல வருட நடிப்பு பசியில் கிடந்தவருக்கு சுசீந்திரன் புரோட்டா மூலம் சூரியின் பசியை ஆற்றினார். 50 புரோட்டாக்களை உண்ணும் காட்சியில் சூரி அதகளம் செய்ய, வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அந்த சீன் அடையாளம் ஆனது. கூடவே சூரியும் அடையாளப்பட்டார். அதனையடுத்து முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறினார் சூரி.

விடுதலை சூரி: காமெடி நடிகராக வலம் வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். கடந்த வருடம்் வெளியான அந்தப் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; அவர் வெறும் காமெடி ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டனர். ஆக்‌ஷன் காட்சிகளில் அசால்ட்டாக ரிஸ்க் எடுத்திருந்த சூரிக்கு விடுதலை அடுத்த அடையாளமாக மாறியிருக்கிறது. அடுத்ததாக நடித்த கருடன் படமும் மெகா ஹிட்டானது.

கொட்டுக்காளி: கதையின் நாயகனாக சூரி நடித்த விடுதலை, கருடன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் வரவேற்பை பெற்றன. கடைசியாக பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்தில் நடித்தார். அதில் அன்னா பென் கதாநாயகியாக நடிக்க சிவகார்த்திகேயன் படத்தை தயாரித்திருந்தார். படத்தை சினிமா செலிபிரிட்டிகள் கொண்டாடி தீர்த்தனர். மேலும் பெரும்பாலான ரசிகர்களும் தங்களது ஆதரவையே படத்துக்கு கொடுத்தனர்.

ஓடிடி ரிலீஸ்: கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம் வசூல் ரீதியாகவும் லாபத்தை கொடுத்திருப்பதாக இயக்குநர் வினோத் கூறியிருக்கிறார். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி செப்டம்பர் 27ஆம் தேதி சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என்றும்; கூடுதலாக இன்னொரு ஓடிடி தளத்திலும் படம் ஸ்ட்ரீமாகலாம் என்றும் கூறப்படுகிறது. அநேகமாக அந்த இன்னொரு ஓடிடி தளமானது அமேசான் ப்ரைம் அல்லது நெட்ஃப்ளிக்ஸாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X