ஒரு நாள் தான் டைம்.. கொலை செய்ய பயிற்சியா.. கர்மாவை பார்க்கவே பயங்கரமா இருக்கு
சென்னை: நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியான கர்மா வெப் சீரிஸ் விமர்சன ரீதியாக பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. ஒருவர் செய்த நல்ல செயல் கஷ்டமான காலத்தில் கை கொடுக்கும். அதேபோன்று கெட்டது விதைத்தவருக்கு கர்மா சும்மா விடாது என்பார்கள். அந்த வகையில் செளத் கொரியனில் காதல் டிராமா தான் எப்போதும் இளைஞர்களை கவரும் ஆனால், கர்மா வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸில் சக்கை போடு போட்டு வருகிறது. 6 எபிசோடு .320 நிமிடங்கள் ,தமிழ் டப்பிங்கிலும் இதை காணலாம். இதுகுறித்த விமர்சனங்களை இதில் காணலாம்.
முதல் சம்பவம்: நாயகி ஸ்கூலில் படிக்கும்போது பிரபல பத்திரிகையின் அட் டையில் கவர் ஸ்டோரியாக வந்து விடுகிறாள் . இதில் நாயகியின் தோழிக்குப் பொறாமை வருகிறது. இதனால், ஹீரோயினை பழிவாங்க நினைக்கும் தோழி 3 மாணவர்கள் உன்னை பிளைன்ட் டேட் பண்ண அழைக்கிறார்கள் ,வா என அழைக்கிறாள் ( பிளைன்ட் டேட் - முகமூடி அணிந்தவர்களுடன் டேட்டிங்க் போவது அவர்கள் யார் என்பது தெரியாது ) . முதலில் யோசித்த நாயகி பின் சம்மதம் சொல்கிறாள் . தோழியின் சதி திட்டத்தில் அந்த 3 மாணவர்கள் நாயகியை பாலியல் வன்கொடுமை செய்து விடுகிறார்கள். இந்த துயரமான சம்பவம் நடந்து பல வருடங்கள் கழித்து நாயகி டாக்டர் ஆக பணி புரிகிறார் . தன் வாழ்வை சீரழித்த அந்த 3 பேரைப் பற்றி விசாரிக்கிறாள் . அவர்களில் இருவர் ஜெயிலில் , ஒரு ஆள் மட்டும் வெளியே . அவனைப்பழி வாங்கத்துடிக்கிறாள்.

2ஆவது சம்பவம்: தமிழில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் வரும் ஜோதிகா மாதிரி வில்லி ஒரு காதல் சதிகாரியாக இருக்கிறார். காதல் வலையில் யாராவது சிக்குவார்களா? என பார்ப்பது , சிக்கினால் அவனுடன் நெருக்கமாக இருப்பது போல போட்டோ , வீடியோ எடுத்து அவனிடம் காட்டி மிரட்டுவது , பணம் பறிப்பது இதுதான் வில்லியின் தொழிலாகவே வைத்திருக்கிறார். இதற்கு அவனது காதலன் துணையாக இருக்கிறான்.
3வது சம்பவம்: இதைத்தொடர்ந்து வில்லனுக்கு ஏகப்பட்ட கடன் உண்டு , கடன் கொடுத்தவன் ஒரு மாசம் டைம் கொடுத்து அதற்குள் கடனை அடைக்காவிடடால் ஆளை க்ளோஸ் பண்ணி விடுவோம் என மிரட்டியதால் பணத்தேவையில் இருக்கிறான் . வில்லனின் அப்பா மிகப்பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் எடுத்திருப்பதை தெரிந்துகொண்டு தன அப்பாவையே போட்டுத்தள்ள முயற்சிக்கிறான் . இதற்காக ஒரு வாடைகை கொலையாளியை தயார் செய்கிறான். இதில், சமரசமான டீல் நடக்கிறது. அப்பாவை கொலை செய்தால் இன்சூரன்ஸ் பணத்தில் 30% கமிஷன்.

மேலே குறிப்பிட்டுள்ள 3 சம்பவங்களில், நாயகி , வில்லி , வில்லன் , வில்லன் நெம்பர் 2 ,வில்லன் நெம்பர் 3 ஆகிய 5 பேருக்கும் எப்படி தொடர்பு நிகழ்கிறது ? என்ன சம்பவங்கள் நடந்தன என்பது தான் மீதி கதை. கர்மா என்பது பூமாரங்க் போல , கெடுவான் கேடு நினைப்பான் . நாம் செய்யும் கெடுதல்கள் நம்மையே தாக்கும் என்ற விஷயம் தான் கதைக்கரு . கெட்டவர்கள் அழிவார்கள் என்ற கருத்தை சொன்ன விதம் நான் லீனியர் வடிவில் திரைக்கதை அமைத்து சிறப்பான பணியை செய்திருக்கிறார் இயக்குநர்.
குறிப்பாக வில்லி யார் என்பது தெரிய வரும் டிவிஸ்ட் , வில்லனை ஆள் மாறாட் டம் செய்து மாட்டிக்கொள்ளும் இன்னொரு வில்லன் போன்ற ட்விஸ்ட்கள் பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஒரே நாளில் பார்க்க முடியும் அளவிற்கு விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது கர்மா
வசனம்: என் காண்டாக்ட்ல இருக்கறவனுங்க எல்லாரும் என்னை விடப்பிச்சைக்காரனாக இருக்கிறார்கள் .
நீதான் தறுதலைன்னு பார்த்தா உன்னை சுத்தி இருக்கறவங்களும் அப்படித்தான் இருக்காங்க .பழம் விழுமா?ன்னு பார்த்துட்டு இருந்தா கல்லடி தான் கிடைக்கும். என்னை நிமிர்ந்து பார்க்கவே உனக்கு தைரியம் இல்லை , எப்படிக்கொல்லப்போறே ?. ஆசைப்பட்டதை வாங்க வக்கில்லைன்னா திருடவாவது கத்துக்கணும் . ஒரு நாள் தான் டைம் , மிஸ் ஆனா நீ மிஸ் ஆகிடுவே எவ்ளோ ஆழம் தான் தோண்டுவது ? இப்படியே தோண்டுனா பெட்ரொல் கிடைக்கும் போலயே?. கர்மா என்பது உண்மையில் இருக்கு . செய்யும் தப்புக்கு தண்டனை உண்டு போன்ற வசனங்கள் ரசிக்க வைப்பதோடு கதையின் உள்ளே நகர வைக்கிறது.
மைனஸ்: சாலையில் நடக்கும் நபரை கார் மோதி கொல்வதுதான் டாஸ்க் . ஆள் சாகவில்லை , மீண்டும் காரை ரிவர்ஸில் விட்டபின்பும் சாகவில்லை . இப்போ குத்துயிரும் குலை உயிருமா இருக்கும் ஆளை சும்மா ஒரு தட்டு தட்டினாலே செத்துடுவான் .அந்த பேக்கு வில்லன் காரில் அவனை போட்டுக்கொண்டு போய் வேறு இடத்தில் புதைக்கப்போகிறான் , எவ்ளோ பெரிய ரிஸ்க் ? வழியில் போலீஸ் செக்கிங்க் வராதா? கொலைகாரன் சிசிடிவி தன்னைப்பார்ப்பதை அறிந்த பின்னும் அசால்ட் ஆக இருப்பது.
நாயகி பழி வாங்க 15 வருடங்கள் டைம் எடுத்துக்கொள்வது எதற்கு என பல கேள்விகள் எழுகிறது. இதை சரி செய்திருந்தால் கர்மா இன்னும் வேகம் எடுத்திருக்கும்.

அதிக நேரம்: 6 எபிசோடுகளாக வந்தாலும் நேரத்தை கடத்துவதற்காக சில தேவையில்லாத காட்சிகளை கோர்த்து வைத்தது போன்ற உணர்வை தந்திருக்கிறது. இதை தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. கிரைம் த்ரில்லர் ஜானரை விரும்பி பார்ப்பவர்களுக்கு கர்மா வெப் சீரிஸ் வித்தியாசமான அனுபவத்தை தரும். காதல் டிராமா கொரியன் வெப் சீரிஸ்களை பார்த்து ரசிப்பவர்களுக்கு இது புது அனுபவமாக இருக்க வாய்ப்புள்ளது. கொஞ்சம் கவர்ச்சியை தூக்கலாக வைத்திருப்பது சிலருக்கு முகம் சுழிப்பை தரலாம். குடும்பத்தோடு பார்க்க முடியாத வெப் தொடர்தான் என்றாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.
அதிக பார்வையாளர்கள்: கர்மா வெப் தொடர் கடந்த 4ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. வெளியான ஒரு வாரத்திலேயே அதிக பார்வையாளர்களை கொண்ட வெப் தொடர் என்ற சாதனையை படைத்திருக்கிறது. பார்த்தவர்கள் அனைவரும் ஆஹா ஓஹோ என பாராட்ட தொடங்கியுள்ளனர். குறிப்பாக திரை பிரபலங்கள் பலரும் இந்த தொடரை பார்க்க அவர்களது நண்பர்களுக்கும் அழைப்பு கொடுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











