முதல் எபிசோடிலேயே நிர்வாணமாக நிற்கும் ஸ்க்விட் கேம் 2 ஹீரோ.. 2வது சீசனில் உள்ள பிரச்சனைகள் என்ன?
சென்னை: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ஸ்க்விட் கேம் 2 வெப்சீரிஸுக்கு சோஷியல் மீடியாவில் நெகட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஆனால், விமர்சனங்களை கடந்து உலகம் முழுவதும் ரசிகர்கள் அந்த வெப்சீரிஸை ஒரே மூச்சில் பார்த்து வருகின்றனர். தமிழ் டப்பிங்கில் வெளியாகி உள்ள வெப்சீரிஸிலேயே முதல் எபிசோடில் ஹீரோ நிர்வாணமாக இருக்கும் காட்சி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
தென் கொரியாவில் கடன் தொல்லையால் பலர் தற்கொலை செய்துக் கொள்வது உள்ளிட்ட சம்பவங்கள் பெருகி வரும் சூழலில் கடன் தொல்லையால் கஷ்டப்பட்டு உயிரை விடவே துணிந்த நபர்களுக்கு இன்னொரு வாய்ப்புத் தருவதாக கூறி ரகசிய தீவில் நடக்கும் ஸ்க்விட் கேமில் அவர்களை பங்கேற்க வைக்கின்றனர்.

பணத்துக்காக ஆசைப்பட்டு அந்த விளையாட்டை விளையாடும் போட்டியாளர்கள் போட்டியில் தோற்றுவிட்டால் வீட்டுக்கு அனுப்பாமல் அவர்களை கொன்று அந்த மரண ஓலத்தை பணக்கார கூட்டத்துடன் ரசிக்கும் வில்லனுக்கு எதிராக ஹீரோ நடத்தும் போராட்டமாக 2வது சீசன் அமைந்துள்ளது.
முழு நிர்வாணமாக நிற்கும் ஹீரோ: ஸ்க்விட் கேம் வெப்சீரிஸில் நடித்து உலகம் முழுவதும் ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் தென் கொரிய நடிகர் லீ ஜங் ஜே (Lee Jung Jae). சியாங் ஜி ஹுன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 52 வயது நடிகர் ஒவ்வொரு காட்சியிலும் தனது தேர்ந்த நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டு விடுகிறார். முதல் சீசனில் இவரது நடிப்பை எப்படி ரசித்தார்களோ அதே அளவுக்கு 2வது சீசனிலும் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், முதல் எபிசோடில் தனது உடலில் சிப் வைத்துள்ளார்களா என செக் செய்துக் கொண்டு காதுக்கு பின்னால் இருக்கும் சிப்பை கத்திக் கொண்டு அறுத்து எடுக்கும் காட்சியில் முழு நிர்வாணமாக தோன்றி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார் லீ ஜங் ஜே.
2வது சீசனில் என்ன பிரச்சனை: பல கோடி சொத்துக்களை வைத்துக் கொண்டு இருக்கும் ஹீரோ அதெல்லாம் இறந்தவர்களின் பணம் எனக் கூறி வருகிறார். போட்டிக்குள் மீண்டும் செல்லும் அவர் தன்னிடம் இருக்கும் பணத்தை பங்கிட்டுத் தருகிறேன். விளையாட வேண்டாம் எனக் கூறி போட்டியாளர்களை காப்பாற்றியிருக்கலாமே என்கிற கேள்வி வெப்சீரிஸை பார்க்கும் எழத்தான் செய்கிறது. ஆனால், பணத்தாசை பிடித்தவர்கள் இவர் விளையாடியதையே நம்பாமல் போக, இவரை நம்பி எப்படி வெளியே வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுற்றி வளைத்து: 2வது சீசனின் முதல் 2 எபிசோடுகளில் ஹீரோவுக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள் எல்லாம் வில்லன் முன்னால் ஒன்றுமே பலிக்காமல் போனது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது. முதல் 2 எபிசோடுகள் சுற்றி வளைத்து இருப்பது தான் பெரிய பிரச்சனையாக ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களையும் கலவையான விமர்சனங்களை பதிவிடவும் காரணம் என்கின்றனர். மேலும், 7வது எபிசோடு வரை ஹீரோவால் உயிர் நண்பனை கூட காப்பாற்ற முடியாமல் போகிறதே என்றும் வெளியே ஹீரோவை தேடி அலையும் கும்பலும் எந்தவொரு க்ளூவும் கிடைக்காமல் சுற்றிக் கொண்டே இருப்பது சுவாரஸ்யமாக இல்லை.


Click it and Unblock the Notifications











